தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Dc Vs Gt: அருண் ஜேட்லி மைதானம் எப்படி? டெல்லி-குஜராத் இன்று மோதல்

DC vs GT: அருண் ஜேட்லி மைதானம் எப்படி? டெல்லி-குஜராத் இன்று மோதல்

Manigandan K T HT Tamil
Apr 04, 2023 10:35 AM IST

IPL 2023: டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மிட்செல் மார்ஷ், பிருத்வி ஷா, ரிலீ என சிறந்த பேட்ஸ்மேன்களை கொண்டுள்ளது.

குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா, டெல்லி கேப்டன் வார்னர்
குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா, டெல்லி கேப்டன் வார்னர்

ட்ரெண்டிங் செய்திகள்

ஐபிஎல் தொடக்க ஆட்டத்திலேயே சிஎஸ்கேவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்ன்ஸ் அசத்தியது.

குஜராத் அணியில் சுப்மன் கில் 63 தொடக்க ஆட்டத்திலேயே அரை சதம் விளாசி அசத்தினார். ரஷித் கான், முகமது ஷமி, அல்ஜாரி ஜோசப் ஆகிய பந்துவீச்சாளர்கள் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பலமாக உள்ளனர்.

டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மிட்செல் மார்ஷ், பிருத்வி ஷா, ரிலீ என சிறந்த பேட்ஸ்மேன்களை கொண்டுள்ளது.

லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் டேவிட் வார்னர் அரை சதம் விளாசினார். குல்தீப் யாதவ், கலீல் அகமது, அக்ஸர் படேல், சேத்தன் சகாரியா ஆகிய பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.

டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு இருப்பதால் டெல்லிக்கு கூடுதல் பலம் ஆகும்.

முதல் வெற்றியை நோக்கி டெல்லி விளையாடும் என்பதால் பரபரப்பு நிச்சயம் பஞ்சம் இருக்காது.

அதேபோல், குஜராத் டைட்டன்ஸ் அடுத்த வெற்றி ருசிக்க போராடும்.

இன்றிரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. 7 மணிக்கு டாஸ் போடப்படும். ஜியோ சினிமாவில் ஆட்டத்தைக் காணலாம்.

மைதானம் எப்படி?

அருண் ஜேட்லி மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி அதிக ஸ்கோர்களை பதிவு செய்ய முடியும். ஸ்லோ பிட்ச் என்பதால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

டெல்லி கேபிட்டல்ஸ் வீரர்கள் உத்தேசப் பட்டியல்

டேவிட் வார்னர், பிருத்வி ஷா, மிட்செல் மார்ஷ், லலித் யாதவ், சர்ஃபராஸ் கான் (விக்கெட் கீப்பர்), ரோவ்மேன் போவெல், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், சேத்தன் சகாரியா, கலீல் அகமது, முகேஷ் குமார்.

குஜராத் டைட்டன் உத்தேசப் பட்டியல்

ரித்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், மாத்யூ வேட், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், முகமது ஷமி, ஜோஷுவா லிட்டில், யஷ் தயாள், அல்ஜாரி ஜோசப்.

WhatsApp channel

டாபிக்ஸ்