MS Dhoni and Jadeja Rift: தோனியுடனான ஜடேஜாவின் உறவு! சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் வெளிப்படை பேச்சு
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ms Dhoni And Jadeja Rift: தோனியுடனான ஜடேஜாவின் உறவு! சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் வெளிப்படை பேச்சு

MS Dhoni and Jadeja Rift: தோனியுடனான ஜடேஜாவின் உறவு! சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் வெளிப்படை பேச்சு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 22, 2023 04:11 PM IST

ரவீந்திர ஜடேஜா மோசமாக உணர்ந்திருக்கலாம். ஆனால் தோனியுடனான உறவில் அவருக்கு ஒருபோதும் விரிசல் ஏற்பட்டதில்லை என்று சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இதன்மூலம் தோனி - ஜடேஜாவுக்கு இடையே விரிசல் ஏற்பட்டிருப்பதாக உலா வரும் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தோனி - ஜடேஜா உறவு குறித்து வெளிப்படையாக பேசியுள்ள சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன்
தோனி - ஜடேஜா உறவு குறித்து வெளிப்படையாக பேசியுள்ள சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன்

இந்த நிகழ்வின் காரணமாக தோனி - ஜடேஜா உறவில் விரிசல் ஏற்பட்டதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. அதை உறுதிபடுத்தும் விதமாக ஜடேஜாவும், சிஎஸ்கே அணியை டுவிட்டரில் Unfollow செய்தார். இதனால் ஜடேஜா சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேறிவிடுவார் என்று கூறப்பட்டது. இதையடுத்து தோனியின் சமாதான முயற்சிக்கு பின்னர் ஜடேஜாவும் தனது முடிவை மாற்றிக்கொண்டதாகவும், சிஎஸ்கே அணியில் தொடர முடிவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் எம்எஸ் தோனி - ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா ஆகியோரின் உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியான தகவல்களுக்கு, சிஎஸ்கே நிர்வாகம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது. இதுபற்றி உண்மை பின்னணியை சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் வெளிப்படுத்தியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

ஜடேஜாவை பொறுத்தவரை சிறப்பாக பவுலிங் செய்கிறார். பேட்டிங்கை பொறுத்தவரை ருதுராஜ், கான்வே, மொயின் அலி, ரஹானே ஆகியோருடன் ஜடேஜாவும் தனது பங்களிப்பை தந்துள்ளார். 5 முதல் 10 பந்துகள் எஞ்சியிருக்கும் இக்கட்டான நிலையில் அவர் பேட் செய்துள்ளார். அப்போது அவர் அடிக்கலாம், அடிக்காமலும் போகலாம். அப்போது தனக்கு அடுத்து தோனி பேட் செய்ய வருவது அவருக்கு நன்கு தெரியும். அந்த சமயத்தில் தோனியை வரவேற்கை ஜடேஜாவின் விக்கெட்டை ரசிகர்கள் கொண்டாடவதை அவருக்கு புண்பட்டிருக்கலாம். மோசமான உணர செய்திருக்கலாம். அந்த மாதிரி நேரத்தில் எந்த ஒரு வீரரும் அழுதத்தை உணர்வது இயல்புதான். ஆனால் அதுபற்றி அவர் ஒரு போதும் புகார் சொன்னதில்லை.

இதைபற்றி பேசும்போது ஜடேஜாவை சமாதானப்படுத்துவது போல் தோன்றும். ஆனால் விளையாட்டில் இவை அனைத்து ஒரு பகுதியாகவே உள்ளது. போட்டி பற்றியே நான் அவரிடம் பேசியுள்ளேன். அதுதவிர வேறெந்த உரையாடல்களும் நிகழ்ந்ததில்லை. அணியின் சூழல் பற்றி அனைவரும் நன்கு அறிவார்கள். எங்களுக்குள் எந்த பிரச்னையும் இருந்ததில்லை.

ஜடேஜாவுக்கு தோனி மீது மிகப் பெரிய மரியாதை உள்ளது. இந்த சீசனில் பைனில் வெற்றி பெற்ற பிறகு கூட வெற்றியை தோனிக்கு அர்பணிப்பதாக தெரிவித்தார். எனவே அந்த அளவுக்கு அவர் மீது மரியாதை வைத்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.