தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Arjun Tendulkar: அர்ஜுன் டெண்டுலகரின் இடது கையில் நாய் கடித்ததால் காயம்-இன்றைய ஆட்டத்தில் விளையாடுவாரா?

Arjun Tendulkar: அர்ஜுன் டெண்டுலகரின் இடது கையில் நாய் கடித்ததால் காயம்-இன்றைய ஆட்டத்தில் விளையாடுவாரா?

Manigandan K T HT Tamil
May 16, 2023 12:43 PM IST

Mumbai Indians: லக்னோ வீரர் ஒருவரிடம் தன்னை இடது கையில் நாய் கடித்துவிட்டதாக கையைக் காண்பித்து கூறுகிறார் அர்ஜுன் டெண்டுல்கர்.

அர்ஜுன் டெண்டுல்கர்
அர்ஜுன் டெண்டுல்கர் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த ஆட்டம் உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் உல்ள அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்த ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றால், புள்ளிப் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறும். 16 புள்ளிகளைப் பெறும்.

15 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 3வது இடத்திற்கு வரும். இந்தப் போட்டியில் விளையாடுவதற்காக லக்னோவிற்கு மும்பை இந்தியன்ஸ் அணி சென்றுள்ளது.

அங்கு அவர்கள் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியினருடன் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஜாலியாக பேசுவது போன்ற வீடியோ ஒன்றை லக்னோ அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளார்.

அதில், "லக்னோ வீரர் ஒருவரிடம் தன்னை இடது கையில் நாய் கடித்துவிட்டதாக கையைக் காண்பித்து கூறுகிறார் அர்ஜுன் டெண்டுல்கர். அதிர்ச்சி அடைந்த அந்த வீரர் எப்போ இப்படி ஆச்சு என கேட்கிறார். அதற்கு அவர் ஒரு நாள் முன்பு என்று பதிலளிக்கிறார். உடனே அவரை காயத்தை பார்த்துக் கொள்ளும்படி லக்னோ வீரர்கள் அறிவுறுத்துகின்றனர்" இவ்வாறு அந்த வீடியோ பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமாகி விளையாடினார் அர்ஜுன் டெண்டுல்கர்.

வேகப்பந்துவீச்சாளரான அவர், நன்றாக பந்துவீசி வருகிறார். காயம் ஏற்பட்டிருப்பதாக அவர் கூறுவதால் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவாரா என தெரியவில்லை.

முந்தைய 2 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று சாம்பியன் அணி என நிரூபித்து வருகிறது மும்பை இந்தியன்ஸ். இன்றைய ஆட்டத்தில் வென்றால் அந்த அணி ஹாட்ரிக் வெற்ற பெறும்.

தொடக்கத்தில் சொதப்பிவந்த சூர்யகுமார் யாதவ், சமீப காலமாக வெளுத்து வாங்கி வருகிறார். குஜராத்திற்கு எதிரான முந்தைய ஆட்டமுந்தைய த்தில் சூர்யகுமார் யாதவ் தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார.

நெஹல் வதேரா, இஷான் கிஷன், டிம் டேவிட் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

சொந்த மண்ணில் இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி அதில் 2இல் மட்டுமே ஜெயித்துள்ளது லக்னோ. ஆர்சிபி, குஜராத், பஞ்சாப் ஆகிய அணிகள் லக்னோவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்