IPL 2022: ஒற்றை ஆளாக சூர்யகுமார் யாதவ் ரன் குவிப்பு! ஆர்சிபிக்கு 152 இலக்கு
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ipl 2022: ஒற்றை ஆளாக சூர்யகுமார் யாதவ் ரன் குவிப்பு! ஆர்சிபிக்கு 152 இலக்கு

IPL 2022: ஒற்றை ஆளாக சூர்யகுமார் யாதவ் ரன் குவிப்பு! ஆர்சிபிக்கு 152 இலக்கு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 09, 2022 10:19 PM IST

மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் தவறான ஷாட்கள் விளையாடி விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், ஒற்றை ஆளாக போராடி அணியின் ஸ்கோரை 151 என உயர்த்தியுள்ளார்.

<p>பந்தை பவுண்டரிக்கு விரட்டும் சூர்யகுமார் யாதவ்</p>
<p>பந்தை பவுண்டரிக்கு விரட்டும் சூர்யகுமார் யாதவ்</p> (PTI)

மும்பை இந்தியன்ஸ் அணியில் இந்தியாவை சேர்ந்த இளம் பேட்ஸ்மேன் ராமன்தீப் சிங், பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். வெளிநாட்டு வீர்ரகளான டேனியல் சாம்ஸ், டைமல் மில்ஸ் ஆகியோர் நீக்கப்பட்டனர். அத்துடன் திவால்ட் பிரிவிஸ், கைரன் பொல்லார்டு என இரு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாடுகிறார்கள்.

தொடக்க பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய இஷன் கிஷன் - ரோஹித் ஷர்மா ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்னர்ஷிப் அமைத்தனர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

இவருக்கு அடுத்தபடியாக களமிறங்கிய திவால்ட் பிரிவீஸ் 8 ரன்களில் வெளியேற, சிறப்பாக ஆடிக்கொண்டு வந்த இஷான் கிஷனும் 26 ரன்களில் வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து திலக் வர்மா, கைரன் பொல்லார்டு ஆகியோர் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தனர். புதிதாக சேர்க்கப்பட்ட ராமன்தீப் சிங்கும் 6 ரன்களில் வெளியேற 79 ரன்களில் 6 விக்கெட்டுகள் இழந்து தவித்தது.

அப்போது களத்தில் இருந்த சூர்யகுமார் யாதவ் ஒற்றை ஆளாக ரன் குவிப்பில் ஈடுபட்ட அணியை கரை சேர்த்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 37 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். இவர் தனது இன்னிங்ஸில் 5 பவுண்டரி, 6 சிக்ஸ்ர்களை விளாசினார்.

இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 151 ரன்கள் எடுத்தது.

மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்களை கதிகலங்க செய்த ஆர்சிபி பெளலர்கள் ஹர்சல் படேல், ஹசரங்கா டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.