T20 world cup: டி20 உலகக்கோப்பை; அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்காவை நெதர்லாந்து வீழ்த்தியதால் இந்தியா அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில், சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், அடிலெய்டில் இன்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்று போட்டியில் நெதர்லாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. 159
159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் நெதர்லாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்கா தோல்வியடைந்ததால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.
இதையடுத்து குரூப் பி பிரிவில் 6 புள்ளிகள் பெற்றுள்ள இந்திய அணி டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அதேசமயம் அடுத்து நடக்கும் பாகிஸ்தான் - வங்கதேசம் இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு செல்லும்.
டாபிக்ஸ்