T20 world cup: பைனலில் இந்தியா தகுதி பெற்றால் வெறித்தனமாக இருக்கும் - ஹெய்டன்
இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதினால் மெர்லபோர்னில் ரசிகர்கள் ஆரவாரம் வெறித்தனமாக இருக்கும் என்று பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மேத்யூ ஹெய்டன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய மேத்யூ ஹெய்டன், " இந்த நாள் மிகவும் சிறப்பானது. இந்த ஆட்டத்தில் எல்லோரும் பாபர் - ரிஸ்வான் பற்றிதான் பேசுவார்கள். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. ரிவர்ஸ் ஸ்விங் பந்தை வீச முடிந்ததால் ஷாஹீன் அப்ரிடியை எதிர்கொள்வது மிகவும் கடினமாகிவிட்டது.
இன்றைய போட்டி முடிவு இறுதியில் இந்தியா - பாகிஸ்தான் விளையாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா, இங்கிலாந்தை வீழ்த்தினால் 15 ஆண்டுகளுக்கு இரண்டாவது முறையாக மோதும். உலக மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பகுதியினர் அங்கே ஒரே நேரத்தில் ஆதரவு கொடுப்பார்கள் அது மிகவும் அபாரமானது. அதை உங்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.
இறுதி ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதினால் மிகவும் சிறப்பான ஆட்டமாக அமையும். மெல்போர்னில் ரசிகர்கள் ஆரவாரம் வெறித்தனமாக இருக்கும். இது நினைத்து கூட பார்க்க முடியாதது.
இவ்வாறு அவர் கூறினார்.
லீக் சுற்றில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி பின்னர் அடுத்தடுத்து மூன்று வெற்றிகளை பெற்று விஸ்வரூபம் எடுத்த பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதையடுத்து அரையிறுதி போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டியில் விளையாடவுள்ள நிலையில் இந்தியா அதை இறுதிப்போட்டியில் எதிர்கொள்ள வேண்டும் என்பது கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
டாபிக்ஸ்