HT Sports Special: பிரெஞ்சு ஓபனில் கவனம் ஈர்த்த 16 வயது ரஷ்ய வீராங்கனை!
Mirra Andreeva: மிரா ஆன்ட்ரீவா, ரஷ்யாவின் கிரஸ்னோயர்ஸ்கில் 2007ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி பிறந்தார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டியாகும். உலகம் முழுவதும் முன்னணி வீரர்களும்-வீராங்கனைகளும் பங்கேற்று வருகின்றனர்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி மே 22-ம் தேதி தொடங்கி ஜூன் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
ஆடவர் ஒற்றையர் பிரிவு, மகளிர் ஒற்றையர் பிரிவு, ஆடவர் இரட்டையர் பிரிவு, மகளிர் இரட்டையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு ஆகியவற்றில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
2005ம் ஆண்டுக்கு பிறகு பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் இளம் வயதில் 3 வது சுற்றை எட்டிய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார் மிரா ஆன்ட்ரீவா.
மே 22ம் தேதி, 24, 25 ஆகிய தேதிகளில் நடந்த தகுதிச்சுற்று போட்டிகளில் எதிரணி வீராங்கனைகளை வீழ்த்திவிட்டு முதல் சுற்றில் அடியெடுத்து வைத்தார் மிரா.
முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனை ஏ.ரிக்கேவை 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
அதைத் தொடர்ந்து இரண்டாவது சுற்றில் பிரான்ஸ் வீராங்கனை டயன் பாரியை 6-1, 6-2 என்ற என்ற கணக்கில் வீழ்த்தினார்.
பின்னர் மூன்றாவது சுற்றில் அமெரிக்க வீராங்கனை கோகோ கவுஃபை எதிர்கொண்டார்.
ஆனால், சிறப்பாக இத்தனை ஆட்டங்களை கடந்து வந்த ஆன்ட்ரீவா, 7-6, 1-6, 1-6 என்ற கணக்கில் அமெரிக்க வீராங்கனை கோகோவிடம் தோல்வி அடைந்தார்.
யார் இந்த மிரா ஆன்ட்ரீவா?
மிரா ஆன்ட்ரீவா, ரஷ்யாவின் கிரஸ்னோயர்ஸ்கில் 2007ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி பிறந்தார்.
ஆஸ்திரேலியன் ஓபன் ஜூனியர் டென்னிஸ் போட்டியில் நிகழாண்டில் ஃபைனல் வரை முன்னேறினார்.
ஒற்றையர் பிரிவில் 143வது இடத்தில் உள்ளார் ஆன்ட்ரீவா. மரியா ஷரபோவை போன்று வருவார் என டென்னிஸ் உலகில் ஆருடம் சொல்கின்றனர்.
16 வயதிலேயே களிமண் மைதானமான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் மூன்றாவது சுற்று வரை முன்னேறி கவனம் ஈர்த்துள்ளார் மிரா ஆன்ட்ரீவா.
ஒற்றையர் பிரிவில் 143வது இடத்தில் உள்ளார் ஆன்ட்ரீவா. மரியா ஷரபோவை போன்று வருவார் என டென்னிஸ் உலகில் ஆருடம் சொல்கின்றனர்.
டாபிக்ஸ்