தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Cwc Qualifiers 2023: ஹாட்ரிக் 5 விக்கெட்டுகள்! பேட்ஸ்மேன்களுக்கு அரக்கனாக இருந்து வரும் ஹசரங்கா

CWC qualifiers 2023: ஹாட்ரிக் 5 விக்கெட்டுகள்! பேட்ஸ்மேன்களுக்கு அரக்கனாக இருந்து வரும் ஹசரங்கா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 27, 2023 10:53 AM IST

ஹாட்ரிக் முறையாக 5 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹசரங்காவின் அற்புத பவுலிங்கால் இலங்கை அணி, அயர்லாந்துக்கு எதிராக வெற்றி பெற்றதுடன் உலகக் கோப்பை குவாலிபயர் தொடரின் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கும் தகுதி பெற்றது.

அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இலங்கை ஸ்பின்னர் ஹசரங்கா
அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இலங்கை ஸ்பின்னர் ஹசரங்கா

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 325 ரன்கள் எடுத்தது. இலங்கையின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் கருணரத்னே 103 ரன்கள் எடுத்தார்.

இதைத்தொடர்ந்து பேட் செய்த அயர்லாந்து 192 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அற்புதமாக பவுலிங் செய்த ஹசரங்கா 79 ரன்களை வாரி வழங்கியபோதிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் உலகக் கோப்பை குவாலிபயர் தொடரில் விளையாடிய 3 போட்டிகளிலும் 5 விக்கெட் வீழ்த்தி சாதனைபுரிந்துள்ளார்.

இதுவரை 16 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கும் ஹசரங்கா, இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக உள்ளார். பேட்ஸ்மேன்களை தனது அற்புதமான பவுலிங்கால் மிரள வைக்கும் ஹசரங்கா, அரக்கனாகவே உள்ளார்.

இந்த தொடரில் விளையாடி வரும் ஸ்பின் பவுலர்களில் தொடர்ந்து சிறப்பாக செய்பட்டு வரும் இவர், விக்கெட்டுகளையும் அள்ளி வருகிறார். தற்போதையை நிலையில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வென்று குரூப் பி பிரிவில் முதல் இடத்தில் உள்ளது இலங்கை அணி.

சூப்பர் சிக்ஸ் தொடரிலும் வெற்றி பயணத்தை தொடர்ந்து, இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்பட்சத்தில் இலங்கை அணி உலகக் கோப்பை 2023 தொடரில் விளையாட தகுதி பெறும்.

இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. ஸ்பின் பவுலிங்குக்கு நன்கு ஒத்துழைப்பு தரும் இந்திய ஆடுகளங்களில் ஹசரங்கா நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் பவுலராக இருப்பார் என எதிர்பார்க்கலாம். ஏற்கனேவே ஐபிஎல் தொடரில் பங்கேற்ற அனுபவம் அவருக்கு நன்கு கைகொடுக்கும் எந நம்பலாம்.

ஹசரங்கா தற்போது இருக்கும் பார்மை தொடரும்பட்சத்தில், உலகக் கோப்பை 2023 தொடரில் இலங்கை அணி எதிர்கொள்ள கடினமான அணியாகவே உருவெடுக்ககூடும்.

உலகக் கோப்பை குவாலிபயர் தொடரில் குரூப் ஏ பிரிவில் ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட்இண்டீஸ் அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் அணிகளும் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. 

இலங்கை அணி தனது அடுத்த போட்டியில் ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இன்று நடைபெறுகிறது. இதுவரை இந்த அணிகளும் தங்களது பிரிவில் தோல்வியடையாத அணியாக இருந்து வரும் நிலையில், இன்றைய போட்டியில் ஒரு அணி முதல் தோல்வியை பெறவுள்ளது.  

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel

டாபிக்ஸ்