தமிழ் செய்திகள்  /  Sports  /  Happiest Birth Day Indian Cricket Player Dinesh Karthik Match Winner In Nidahas Trophy

HBD Dinesh Karthik: கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்த தினேஷ் கார்த்திக்-மறக்க முடியாத மேட்ச்

Manigandan K T HT Tamil
Jun 01, 2023 05:00 AM IST

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 56 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர், 672 ரன்கள் பதிவு செய்திருக்கிறார். ஒரே ஒரு அரை சதம் மட்டுமே பதிவு செய்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்
இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்காக கடந்த 2004ம் ஆண்டு அறிமுகமானார் தினேஷ் கார்த்திக். ஒரு நாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக செப்டம்பர் மாதமும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதே 2004ம் ஆண்டு நவம்பர் மாதமும் இந்திய அணியில் இடம்பிடித்தார் தினேஷ் கார்த்திக்.

டெஸ்டில் 26 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக், 1,025 ரன்களும், 94 ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடியுள்ள அவர் 1,752 ரன்களும் விளாசியிருக்கிறார்.

டெஸ்டில் 1 சதம், 7 அரை சதங்கள், ஒரு நாள் கிரிக்கெட்டில் 9 அரை சதங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 56 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர், 672 ரன்கள் பதிவு செய்திருக்கிறார். ஒரே ஒரு அரை சதம் மட்டுமே பதிவு செய்திருக்கிறார்.

டெஸ்டில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 129 நாட் அவுட். ஒரு நாள் மட்டும் டி20இல் முறையே 79, 55 அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

விக்கெட் கீப்பரான இவர், டெஸ்டில் 57 கேட்ச்களையும் 6 ஸ்டம்பிங்களையும் செய்திருக்கிறார்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் 67 கேட்ச்கள், 7 ஸ்டம்பிங்குகள், டி20 கிரிக்கெட்டில் 26 கேட்ச்கள் 8 ஸ்டம்பிங்குகள் செய்திருக்கிறார் தினேஷ் கார்த்திக்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் 2008ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார்.

டெல்லி, கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், குஜராத் லயன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கு விளையாடியிருக்கிறார். இந்த ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக அவர் விளையாடினார்.

10 வயது முதல் கிரிக்கெட் விளையாடத் தொங்கிய இவர், சென்னையில் டான் பாஸ்கோ பள்ளியில் படித்தவர் ஆவார். இவரது தந்தையும் கிரிக்கெட் வீரர் தான். சென்னையில் ஃபர்ஸ்ட் டிவிசன் கிரிக்கெட்டராக இருந்தார். இளம் வயது முதலே தினேஷ் கார்த்திக்கு நல்ல பயிற்சியை வழங்கினார் அவரது தந்தை.

14 வயதுக்குள்பட்டோருக்கான தமிழக அணியில் இடம்பிடித்தார். அதைத் தொடர்ந்து யு-19 அணியிலும், பின்னர் முதல் தர கிரிக்கெட்டிலும் விளையாடத் தொடங்கினார்.

நிகிதா வஞ்சராவை 2007 இல் திருமணம் செய்து கொண்டார். எனினும், இருவரும் 2012இல் பிரிந்தனர்.

பின்னர், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகளை திருமணம் செய்துகொண்டார் தினேஷ் கார்த்திக்.

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கிரிக்கெட் வீரர் என்பதுடன் வர்ணனையாளராகவும் அவர் பணிபுரிந்திருக்கிறார்.2018ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற நிதாஹஸ் கோப்பையை யாரால் மறக்க முடியும். கடைசி பந்தில் 5 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், ஒரு சிக்ஸர் அடித்து முடித்து கொடுத்திருப்பார் தினேஷ் கார்த்திக்.

ஐபிஎல் 2023 சீசன் பைனலை போன்றது தான் அந்த மேட்ச்சும். அந்த பைனலில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா விளையாடியது. கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரில் 6 பந்துகளில் 22 ரன்களை விளாசியிருந்தார் தினேஷ் கார்த்திக்.

WhatsApp channel

டாபிக்ஸ்