தமிழ் செய்திகள்  /  Sports  /  Hanuma Vihari Uses Bat Like A Sword, Reverse Sweeps, Hits Fours In Another Gritty Innings Despite Fractured Arm

Hanuma vihari:இது பேட்டா இல்ல வாள்-ஆ? விளாசி தள்ளிய விஹாரி...வைரல் விடியோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 03, 2023 02:39 PM IST

கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும், ஒற்றை கையால் பேட்டிங் செய்த ஹனுமா விஹாரி பேட்டை வாள் போல் பயன்படுத்தி பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்து பவுண்டரி விளாசி விடியோ வைரலாகியுள்ளது.

பேட்டை வாள் போல் சீவி பந்தை பவுண்டரிக்கு விரட்டும் ஹனுமா விஹாரி
பேட்டை வாள் போல் சீவி பந்தை பவுண்டரிக்கு விரட்டும் ஹனுமா விஹாரி

ட்ரெண்டிங் செய்திகள்

வலது கை பேட்ஸ்மேனான அவர், இடது கை பேட்ஸ்மேனாக மாறி ஒற்றை கையில் பேட் செய்தார். இதுதொடர்பான விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. விஹாரியின் துணிச்சலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் ஆந்திரா அணி 76 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, 11வது பேட்ஸ்மேனாக களமிறங்கினார் விஹாரி. மீண்டும் ஒற்றை கையிலேயே இடதுகை பேட்ஸ்மேன் போல் பேட் செய்த அவர், 16 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். இதில் 3 பவுண்டரிகளையும் விளாசினார். விஹாரியின் இந்த துணிவான இன்னிங்ஸ் மூலம் ஆந்திரா 93 ரன்களில் ஆல்அவுட் ஆனது.

இவரது இந்த துணிச்சல் முயற்சியை கண்டு எதிரணியினரும் விஹாரியின் ஆட்டத்துக்கு எழுந்து நின்று கைதட்டி பாராட்டினர். இந்த இன்னிங்ஸில் பேட்டை வாள் போல் பயன்படுத்தி ரிவர்ஸ் ஸ்வீப்பில் சீவியவாறு பவுண்டரி அடித்த விடியோ வைரலாகியுள்ளது.

முன்னதாக முதல் இன்னிங்ஸில் விஹாரி பேட் செய்துகொண்டிருந்தபோது, ஆவேஷ் கான் வீசிய பவுன்சர் அவரது இடது கையில் பட்டதில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து பாதியிலேயே வெளியேறிய அவர், 9 விக்கெட்டுகள் ஆன பிறகு கைவலியையும் பொருப்படுத்தாமல் மீண்டும் களமிறங்கி ஒற்றை கையால் பேட் செய்தார். கடைசி பேட்ஸ்மேன் லலித் மோகனுடன் இணைந்து 26 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

அப்போது அவர் தைரியமாக பேட் செய்த விடியோ வைரலான நிலையில், இரண்டாவது இன்னிங்ஸிலும் அணி 100 ரன்கள் கூட எடுக்க முடியாமல் சரிவை சந்தித்தபோது, மீண்டும் ஒற்றை கையுடன் பேட் செய்து அணிக்கான பங்களிப்பை வெளிப்படுத்தினார்.

ஹனுமா விஹாரி இவ்வாறு ஹீரோயிசம் செய்திருப்பது முதல் முறை இல்லை. இதேபோல் 2021இல் சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் பேட்டியில் தொடையில் காயம் ஏற்பட்ட நிலையிலும், ஆல்ரவுண்டர் அஸ்வினுடன் இணைந்து நீண்ட நேரம் பேட் செய்தார். இதனால் அந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தது.

இதைத்தொடர்ந்து இந்தியாவில் தான் விளையாடி வரும் உள்ளூர் அணியான ஆந்திரா அணியை தோல்வியில் இருந்து மீட்க காயமடைந்த போதிலும் போராட்டத்தை வெளிப்படுத்தி இளம் வீரர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார்.

WhatsApp channel

டாபிக்ஸ்