தமிழ் செய்திகள்  /  Sports  /  Fifa Worldcup 2022: Mbappe Brace Takes Fra To 2-1 Win, Champions Qualify For Round Of 16

Fifa worldcup 2022: நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறிய நடப்பு சாம்பியன் பிரான்ஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 28, 2022 12:32 PM IST

அடுத்தடுத்து இரண்டு வெற்றிகள், 6 புள்ளிகள் என உச்சகட்ட பார்மில் இருக்கும் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலியா, டென்மார்க் அணிகளை வீழ்த்தி பிரான்ஸ் அணி அடுத்த சுற்றில் முதல் அணியாக நுழைந்துள்ளது.

நாக் அவுட் சுற்றுக்கு முதல் அணியாக தகுதிபெற்ற நடப்பு சாம்பியன் பிரா்ன்ஸ்
நாக் அவுட் சுற்றுக்கு முதல் அணியாக தகுதிபெற்ற நடப்பு சாம்பியன் பிரா்ன்ஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் பாதியில் இரு அணிகள் கோல் அடிக்காத நிலையில், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக சென்றது. ஆட்டத்தின் 61 நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே முதல் கோல் அடிக்க, அடுத்த 7 நிமிடங்களில் அதற்கு பதிலடி தரும் விதமாக ஆட்டத்தின் 68 வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் ஆன்ட்ரெஸ் கிறிஸ்டென்சன் கோல் அடித்தார்.

இதன்மூலம் இரு அணிகளும் 1-1 என சமநிலை பெற்றது. பின்னர் மேலும் ஒரு அடித்த முன்னேற இரு அணி வீரர்களும் கடுமையாக முயற்சித்தினர். அதற்கு பலனாக பிரான்ஸ் அணிக்கு 86 நிமிடத்தில் இரண்டாவது கோல் கிடைத்தது. இந்த கோலையும் பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே அடித்து தனது அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

இதன் பின்னர் முழு ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றதோடு, தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகள், நடப்பு உலகக் கோப்பை தொடரில் அதிகமாக 6 புள்ளிகளை பெற்று முதல் அணியாக தகுதி நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.

நடப்பு சாம்பியன் அணியான பிரானஸ் இந்த உலகக் கோப்பை தொடரில் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஒரே அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. போர்ச்சுகல், பிரேசில் ஆகிய டாப் அணிகள் இதுவரை 1 போட்டியில் விளையாடி அதில் வெற்றி பெற்றுள்ளது.

எனவே பிரான்ஸ் போன்று இவ்விரு அணிகளும் இரண்டு தொடர் வெற்றிகளை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. பிரான்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் துனிஷியா அணியை எதிர்கொள்கிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்