தமிழ் செய்திகள்  /  Sports  /  Fifa World Cup 2022: Saudi Arabia Down Messi's Argentina In One Of Fifa World Cup's Biggest Upsets

FIFA world cup 2022: அர்ஜென்டினாவை அப்செட் செய்த செளதி அரேபியாவின் அசுர ஆட்டம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 22, 2022 08:09 PM IST

கிரிக்கெட்டை காட்டிலும் கால்பந்து போட்டிகளில் சிறிய அணி மாயஜாலம் செய்து பெரிய அணியை வீழ்த்தும் அப்செட் நிகழ்வுகள் காலங்காலமாக அரங்கேறியுள்ளது. இந்த முறை அதற்கான தொடக்க புள்ளியை சிறிய அணியான செளதி அரபியா, உலகக் கோப்பை வென்ற பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை வீழ்த்தி அதிர்ச்சி அளித்துள்ளது.

அர்ஜென்டினாவுக்கு எதிராக கோல் அடித்த மகிழ்ச்சியில் செளதி அரேபியா வீரர்கள்
அர்ஜென்டினாவுக்கு எதிராக கோல் அடித்த மகிழ்ச்சியில் செளதி அரேபியா வீரர்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

கால்பந்து ரசிகர்களை பொறுத்தவரை இது அர்ஜென்டினாவுக்கான பயிற்சி ஆட்டம் போன்றது எனவும், நிச்சயம் அர்ஜென்டினா எளிதாக வெற்றி பெறும் என கண்ணோட்டத்திலேயே போட்டியை பார்த்திருப்பாவர்கள்.

அதற்கேற்பு அர்ஜென்டினா வீரர்கள் தங்களது கால்பந்து வித்தையை காண்பித்தி எதிரணியினரான செளதி அரேபியா வீரர்களை திக்கு முக்காட வைத்தனர். ஆனால் இந்த போட்டியின் முடிவானது அர்ஜென்டினாவுக்கு எதிராகவே அமைந்தது உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களை அப்செட்டாக்கியிருப்பதோடு, செளதி அரபியாவின் துணிச்சலான ஆட்டத்தையும் பாராட்ட வைத்துள்ளது.

முதலில் ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் கிடைத்த எளிய பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார் அணியின் கேப்டன் மெஸ்ஸி. ஆனால் இதுவே அணிக்கு இந்த ஆட்டத்தின் கடைசி கோல் என யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்.

ஒரு பக்கம் சரியான ஒருங்கிணைப்பு மூலம் அர்ஜென்டினா வீரர்கள் கோல் வாய்ப்புகளை உருவாக்கி, அதை அடைய முயற்சித்தினர். ஆனால் அவை எதுவும் இலக்கை அடையாமல்போனது. அர்ஜென்டினாவுக்கு பதிலடி தரும் விதமாக செளதி அரேபியா வீரர்களும் தங்களது முழு போராட்ட குணத்தையும் வெளிப்படுத்தினர்.

இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை வகித்தது. பின்னர் நடைபெற்ற இரண்டாம் பாதியில், திடீரென ஆதிக்கம் செலுத்திய செளதி அரேபியா வீரர்கள் 48, 53வது நிமிடத்தில் அந்நாட்டு வீரர்களான சலே அல் ஷெஹ்ரி, சலேம் அல் தவ்சாரி ஆகியோர் முறையே அடுத்தடுத்து கோல் அடித்து அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

இதையடுத்து ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்ட நிலையில் மேலும் 2 கோல்கள் அடிக்க வேண்டிய நிலைக்கு அர்ஜென்டினா தள்ளப்பட்டது. அதற்கான முயற்சியில் அனைத்து வீரர்களும் செயல்பட்டபோதிலும் முழு ஆட்ட நேரம் முடியும் வரை துர்தர்ஷ்டவசமாக ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் சிறிய அணியான செளதி அரேபியாவிடம் முதல் நடப்பு உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே தோல்வியை தழுவியது.

மிகவும் கட்டுக்கோப்பான ஆட்டத்தை விளையாடிய அர்ஜென்டினா வீரர்கள் எவ்வித பெனால்டியும் பெறாமலும், மஞ்சள், சிவப்பு அட்டை பெறாமலும் இருந்தனர். ஆனாலும் போட்டியை வெல்ல முடியாமல் தோல்வியை தழுவினர்.

முன்னாள், சாம்பியன் அணியான அர்ஜென்டினா, நட்சத்திர வீரர் மெஸ்ஸி அணியில் இடம்பிடித்திருக்கும் நேரத்திலும் தோல்வியை தழுவியது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அதேசமயம் ஒரு கோல் பின்னடைவு பெற்ற போதிலும் சிறப்பான ஆட்டம் மூலம் மீண்டு அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து வெற்றி பெற்ற செளதி அரேபியா அணிக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்