Shane watson: பைனலில் இந்தியா - பாகிஸ்தான் மோதுவதே அனைவரின் விருப்பம் - வாட்சன்
முதல் டி20 உலக கோப்பை தொடருக்கு பின் இறுதி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் விரும்பிகின்றனர். எவ்வித நெருக்கடியும் இல்லாமல் திடீர் விஸ்வரூபம் மூலம் அரையிறுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான், நியூசிலாந்துக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.
டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இதில் சிட்னியில் நாளை நடைபெறவுள்ள அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. நவம்பர் 10ஆம் தேதி நடைபெறவுள்ள மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
அரையிறுதி ஆட்டங்களில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் வெற்றி பெற்று, இறுதி ஆட்டத்தில் அவர்கள் போடியிட வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் விரும்புகின்றனர். துரதிஷ்டவசமாக சூப்பர் 12 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதியதை நேரில் பார்க்க முடியாமல் போனது.
அந்த ஆட்டத்தை டிவியில் பார்த்து வியந்துபோனேன். முதல் டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. அதேபோல் மறுபடியும் இரு அணிகளும் மோதுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதால், அது நடக்க வேண்டும் என்பது உலக அளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
அரையிறுதி போட்டியில் நியூசிலாந்துக்கு, பாகிஸ்தான் அணி அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என நம்பலாம். அனைத்து வகை பெரிய தொடர்களிலும் ஏதாவது ஒரு அணி நாக்அவுட் போட்டிகளுக்கான நேரடி வாய்ப்பை ஆரம்பத்தில் இழந்து பின்னர் எப்படியாவது நுழைந்து கோப்பையையும் தட்டி செல்வதை பார்த்துள்ளார். சில சமயங்களில் தகுதி பெறாது என்ற நினைக்கும் அணி முக்கிய கட்டத்தில் சிறப்பாக விளையாடி விஸ்வரூபம் எடுக்கும்.
அதுபோல்தான் பாகிஸ்தான் அணி மீதான எதிர்பார்ப்பு தொடருக்கு மத்தியில் இல்லாமல் போனதால் அவர்கள் எவ்வித நெருக்கடியும் இல்லாமல் விளையாடி அரையிறுதி வாய்ப்பை பெற்றுள்ளனர். தற்போது அவர்களுக்கு பெரிய நெருக்கடி இல்லாத நிலையில், நியூசிலாந்துக்கு எளிதாக அச்சுறுத்தலை ஏற்படுத்தவிடலாம் என்றார்.
பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரும், "இந்தியாவும் பாகிஸ்தானும் அரைஇறுதி போட்டிகளுடன் நாடு திரும்ப மாட்டார்கள் என நம்புகிறேன். இறுதி ஆட்டத்தில் இந்த இரு அணிகளும் மோதிக்கொள்வதை பார்க்க விரும்புகிறேன்" என்றார்.
டாபிக்ஸ்