HBD Dutee Chand: சர்வதேச போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர்! மின்னல் வேக ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டி சந்த்
தன் பாலின ஈர்ப்பு உடையவர் நான் என்று டுட்டி சந்த் வெளிப்படையாக கூறியது பலருக்கு அதிர்ச்சி தரும் விஷயமாகவே இருந்தபோது, LGBTQ+ சமூகத்தில் தான் அங்கம் வகிப்பதை உறுதியாக தெரிவித்தார்.
இந்திய தடகள விளையாட்டில் மின்னல் வேக ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருப்பவர் டுட்டி சந்த். ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவரான டுட்டி சந்த், தனது சகோதரி சரஸ்வதி சந்த் மாநில அளவில் ஓட்டப்பந்தயத்தில் சாதித்தை உத்வேகமாக எடுத்து கொண்டு ஓட்டப்பந்தய வீராங்கனையாக உருவெடுத்தார்.
2012 சீசனில் 18 வயதுக்க உட்பட்டோருக்கான பிரிவில் தேசிய அளவில் சாம்பியன் பட்டத்தை வென்ற டுட்டி சந்த், 2013இல் புனேவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் 200மீ தூரத்தை 23.811 விநாடிகளில் கடந்து வெண்கலம் வென்ற தேசத்தை திரும்பி பார்க்க வைத்தார். இதுவே டுட்டி சந்த் வென்ற முதல் சர்வதேச போட்டிக்கான பதக்கமாக அமைந்தது.
2013ஆம் ஆண்டில் உலக இளையோர் சாம்பியன்ஷிப் போட்டியில் 100மீ ஓட்ட பந்தயத்தில் இறுதி வரை தகுதி பெற்றதன் மூலம், இந்த போட்டிகளில் முதல் முறையாக இறுதிக்கு தகுதி பெற்ற இந்தியர் என்ற பெருமை பெற்றார்.
தொடர்ந்து 100மீ, 200மீ ஓட்டப்பந்தயத்தில் தேசிய அளவில் சாம்பியன், ஆசிய ஜூனியிர் சாம்பியன்ஷிப் என அடுத்தடுத்து பதக்கங்களை வென்று 2014 காமன்வெல்த் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றார். ஆனால், பெண் தடகள வீராங்கனைக்கு இருப்பதை விட அதிக அளவில் ஆண்ட்ரோஜென் இருப்பதாக கூறி கடைசி நேரத்தில் காமன்வெல்த் போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டார். அதே ஆண்டில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் நீக்கப்பட்டார்.
2016இல் ஆண்ட்ரோஜென் விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்ட பின்னர் கம்பேக் கொடுத்த டுட்டி சந்த், தொடர்ச்சியாக பல்வேறு ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்றார். 2017இல் ரியா ஓலிம்பிக்ஸ் தொடரில் தகுதி பெற்ற ஓடிய அவர் தகுதி சுற்றிலேயே வெளியேறினார்.
2017ஆம் ஆண்டில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இரண்டு வெண்கலம் வென்ற டுட்டி சந்த், 2018 ஆசிய விளையாட்டில் 100மீ, 200மீ ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி வென்றார். இது ஆசிய விளையாட்டு போட்டிகளில் அவர் வென்ற முதல் பதக்கமாகும்.
2019இல் சம்மர் யுனிவர்சியேட் போட்டிகளில் 100மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார் டுட்டி சந்த். இந்த போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார்.
தன்பாலின திருமணம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து 2019ஆம் ஆண்டில் கருத்து தெரிவித்த டுட்டி சந்த், தன் பாலின ஈர்ப்பு உடையவர் நான் என்று ஓபனாக சொன்னார். இவரது பேச்சு பலரையும் அதிரிச்சி அடைய வைத்தது. டுட்டி சந்த் சொந்த கிராமத்திலேயே அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இருப்பினும் அவர் தனது கருத்திலிருந்து பின் வாங்கவில்லை.
ஆசிய விளையாட்டில் இரண்டு வெள்ளி, ஆசிய சாம்பியன்ஷிப்பில் 4 வெண்கலம், தெற்காசிய விளையாட்டில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம், ஆசிய இண்டோர் தடகள சாம்பியன்ஷிப்பில் வெண்கலம், ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் 2 தங்கம், சம்மர் யுனிவர்சியேட் போட்டியில் தங்கம் ஆகிய பதக்கங்களை வென்றுள்ளார் டுட்டி சந்த்.
இந்தியாவின் அதிவேகம், மின்னல் வேகம் ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்து வரும் டுட்டி சந்துக்கு இன்று பிறந்தநாள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்