Rahul Dravid on Kohli: தியாகத்தால் உயர்ந்தவர்! இளைஞர்களுக்கு உத்வேகமாக இருப்பவர் கோலி - டிராவிட் புகழாரம்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Rahul Dravid On Kohli: தியாகத்தால் உயர்ந்தவர்! இளைஞர்களுக்கு உத்வேகமாக இருப்பவர் கோலி - டிராவிட் புகழாரம்

Rahul Dravid on Kohli: தியாகத்தால் உயர்ந்தவர்! இளைஞர்களுக்கு உத்வேகமாக இருப்பவர் கோலி - டிராவிட் புகழாரம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 20, 2023 11:16 AM IST

கோலி இந்த உயரத்தை அடைய பல்வேறு தியாகங்களை செய்துள்ளார். தனது கடின உழைப்பு, பிட்னஸ் மூலம் இந்திய அணி வீரர்களுக்கும், இளைஞர்களுக்கும் உத்வேகமாக இருந்துள்ளதாக 500வது சர்வதேச போட்டியில் களமிறங்கும் விராட் கோலியை இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பாராட்டியுள்ளார்.

இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் - விராட் கோலி
இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் - விராட் கோலி

சச்சின் டென்டுல்கர், ராகுல் டிராவிட்டுக்கு அடுத்தபடியாக 500 சர்வதேச போட்டிகளில் விளையாடும் இந்தியர் என்ற பெருமையை பெற்றிருக்கும் கோலி, தனது 34 வயதிலேயே இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். அனைத்து வகை கிரிக்கெட்டிலும் கன்சிஸ்டென்ட் ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வீரராக இருந்து வரும் கோலியின் ஆட்ட திறன் குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது: " இந்திய வீரர்கள் பலருக்கு உத்வேகம் அளிப்பவராக கோலி இருந்துள்ளார். நாடு முழுவதும் ஏராளமான இளைஞர்கள், பெண்களுக்கு பிடித்த வீரராக உள்ளார்.

அவரது ஆட்டத்திறன பற்றி புள்ளிவிவரங்கள் தெளிவாக எடுத்துகூறுகின்றன. என்னை பொறுத்தவரை அவரிடம் நான் பார்த்து வியந்த விஷயமாக பின்னால் இருந்தபடி அவர் மேற்கொள்ளும் முயற்சி, கடின உழைப்பும் தான். அதை பலரும் பார்த்திருக்க சாத்தியமில்லை. இதன் விளைவுதான் கோலி 500 போட்டிகள் வரை விளையாட காரணமாக அமைந்துள்ளது.

வலிமை மிக்கவராகவும், உடலை பிட்டாகவும், ஆற்றலுடன் வைத்துக்கொள்ளும் அவர், ஆட்டத்தின்போது வெளிப்படுத்தும் உற்சாகம் 12 முதல் 13 ஆண்டுகளில் இந்த மைல்கல் ஆட்டத்தை விளையாட வைத்துள்ளது.

தனது கிரிக்கெட் வாழ்க்கைக்காக பல்வேறு தியாகங்களையும் செய்துள்ளார். அதை அவர் தொடரவும் விரும்புகிறார். இதை ஏராளமான இளம் வீரர்கள் பார்க்கும்போது அவர்களுக்கு உத்வேகம் அளிப்பதுடன், பயிற்சியாளருக்கும் சிறந்த சூழலை உருவாக்க உதவுகிறது.

ஒருவரது நீடிப்பு தன்மை என்பது கடின உழைப்பு, ஒழுக்கம், சூழ்நிலைக்கு தக்கவாறு அனுசரித்து கொள்வதன் மூலம் கிடைக்கிறது. அந்த வகையில் கோலியின் இந்த நீடிப்பு தன்மை அணிக்கு தொடரட்டும்"

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் இன்றைய போட்டியில் மற்றொரு சிறப்பு அம்சமாக இரு அணிகளுக்கும் மோதிக்கொள்ளும் 100வது டெஸ்ட் போட்டியாக உள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் தற்போது இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்தியா தனது வெற்றி பயணத்தை இந்த போட்டியிலும் தொடரும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.