Rafael Nadal: 20 ஆண்டுகளில் இதுவே முதல்முறை.. டாப் 100-ஐ விட்டு வெளியேறிய நடால்!
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Rafael Nadal: 20 ஆண்டுகளில் இதுவே முதல்முறை.. டாப் 100-ஐ விட்டு வெளியேறிய நடால்!

Rafael Nadal: 20 ஆண்டுகளில் இதுவே முதல்முறை.. டாப் 100-ஐ விட்டு வெளியேறிய நடால்!

Manigandan K T HT Tamil
Jun 13, 2023 04:22 PM IST

ATP Ranking: ரஃபேல் நடால் 20 ஆண்டுகளில் முதல் முறையாக முதல் 100 இடங்களில் இருந்து வெளியேறினார்.

ஸ்பெயின் வீரர் நடால்
ஸ்பெயின் வீரர் நடால்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் செர்பியா வீரர் நோவக் ஜோக்கோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இது கடினமாக களிமண் தரையில் விளையாடப்படும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் அவர் பெறும் 3வது பட்டம் ஆகும்.

ஒட்டுமொத்தமாக கிரண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட தொடரில் அவர் வென்ற 23 வது பட்டம் ஆகும். இதன்மூலம், அவர் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலின் சாதனையை முறியடித்தார். நடாலும், ஜோக்கோவிச்சும் 22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருந்தனர். களிமண் தளத்தில் ராஜா என வர்ணிக்கப்படும் நடால் இம்முறை காயம் காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை.

அதேநேரம், உலகின் பல முன்னணி வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையான போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.

36 வயதாகும் நோவக் ஜோக்கோவிச் 7,595 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். 20 வயதாகும் ஸ்பெயின் வீரர் கர்லோஸ் அல்காரஸ் இரண்டாவது இடத்திற்கு சறுக்கினார்.

ரஷ்ய டென்னிஸ் வீரர் டேனில் மெத்வதேவ் 3வது இடத்திற்கு வந்தார். ஸ்பெயின் வீரரும், 22 முறை கிராண்ட்ஸ்லாம் வென்றவருமான ரபேல் நடால் 2000 புள்ளிகள் சறுக்கி 136 வது இடத்திற்கு சென்றார்.

20 வருடங்களில் நடால் டாப் 100 லிஸ்ட்டை விட்டு வெளியேறியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.