Nathan Lyon: காயம் காரணமாக ஆஷஸ் தொடரில் இருந்து நாதன் லயன் விலகல்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Nathan Lyon: காயம் காரணமாக ஆஷஸ் தொடரில் இருந்து நாதன் லயன் விலகல்

Nathan Lyon: காயம் காரணமாக ஆஷஸ் தொடரில் இருந்து நாதன் லயன் விலகல்

Manigandan K T HT Tamil
Jul 03, 2023 02:49 PM IST

அவர் இல்லாத நிலையிலும் ஆஸ்திரேலியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. அவர் இருந்திருந்தாலும் இன்னும் கூட அதிக ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி., ஜெயித்திருக்க வாய்ப்பிருக்கிறது.

காயத்தால் அவதியுற்றிருக்கும் ஆஸி., பவுலர் நாதன் லயன்.
காயத்தால் அவதியுற்றிருக்கும் ஆஸி., பவுலர் நாதன் லயன். (AFP)

போட்டியின் 2-வது நாளான வியாழக்கிழமை ஃபீல்டிங் செய்தபோது லயனுக்கு காயம் ஏற்பட்டது. சனிக்கிழமை 11-வது இடத்தில் களமிறங்கிய அவர், மிட்செல் ஸ்டார்க்குடன் இணைந்து 4 ரன்கள் எடுத்து 15 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை பகிர்ந்து கொண்டார்.

அவர் இல்லாத நிலையிலும் ஆஸ்திரேலியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. அவர் இருந்திருந்தாலும் இன்னும் கூட அதிக ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி., ஜெயித்திருக்க வாய்ப்பிருக்கிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் கூறுகையில், லயனுக்கு மாற்றாக மர்பி இருப்பாரா என்பதை இப்போது சொல்ல முடியாது, ஆனால் எதிரணியின் தாக்குதல் ஆட்டத்தை கட்டுப்படுத்த ஒரு சிறப்பு சுழற்பந்து வீச்சாளரை அணியில் சேர்க்க விரும்புகிறேன். ஸ்பின்னர்களை சேர்க்க முன்னுரிமை கொடுப்போம் என்றார்.

எட்ஜ்பாஸ்டனில் நடந்த தொடரின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவின் வெற்றியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய லயன், லார்ட்ஸ் மைதானத்தில் தொடர்ந்து 100-வது டெஸ்டில் விளையாடினார்.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி ஹெட்டிங்லியில் வியாழக்கிழமை தொடங்குகிறது.

முதல் இரண்டு டெஸ்ட்களில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று வீறு நடை போட்டு வருகிறது.

ஆஷஸ் 2023 தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, 2-0 என்ற கணக்கில் ஆஸி., முன்னிலை வகித்து வருகிறது.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 416 ரன்கள் எடுத்தது. ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 110 ரன்கள் எடுத்தார்.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து 325 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. ஓபனிங் பேட்ஸ்மேன் டக்கெட் அதிகபட்சமாக 98 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 91 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்கள் குவித்தது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.