HT Sports Special: இந்தியாவுக்காக இவர் விளையாடியதில்லை! இவர் இல்லாமல் இந்திய கிரிக்கெட் இல்லை
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ht Sports Special: இந்தியாவுக்காக இவர் விளையாடியதில்லை! இவர் இல்லாமல் இந்திய கிரிக்கெட் இல்லை

HT Sports Special: இந்தியாவுக்காக இவர் விளையாடியதில்லை! இவர் இல்லாமல் இந்திய கிரிக்கெட் இல்லை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 19, 2023 11:49 AM IST

சர்வதேச அளவிலோ, உள்ளூர் அளவிலோ பெரிதாக கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடாத நபராக இருந்தாலும் கிரிக்கெட் விளையாட்டை ஆணிவேராகவும், கிரிக்கெட் வீரர்களின் திறன்களை சரியாக ஆராய்வதும், அலசுவதும் மிகவும் முக்கிய சரியான கணிப்புகளை வெளிப்படுத்திவதில் வல்லவராகவும் இருப்பவர் ஹர்ஷா போக்லே.

கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே
கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே

ஹைதரபாத்தில் பிறந்து பள்ளி கல்லூரி படிப்பை முடித்த ஹர்ஷா போக்லே மாரத்திய குடும்பத்தை சேர்ந்தவர். ஆனால் இவர்களின் குடும்ப பூர்வீகம் இந்திய பிரிவினைக்கு முன்னர் பாகிஸ்தானின் லாகூர் வசித்து வந்ததாக இவரே குறிப்பிட்டுள்ளார்.

பிடெக் கெமிக்கல் எஞ்சினியரிங், பிஜிடிஎம் என படித்த இவர் ஆரம்பத்தில் விளம்பர ஏஜென்சியின் பணிபுரிந்தார். பின்னர் ஸ்போர்ஸ் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து மெல்ல தனது ஆர்வத்தை விளையாட்டு பக்கம் திருப்பினார்.

ஹர்ஷா போக்லே வாழ்நாளில் விளையாடி கிரிக்கெட் என்றால் அது ஹைதரபாத்தில் ஒஸ்மானியா பல்கலைகழகத்தில் விளையாடி டிவிஷன் கிரிக்கெட் மட்டும்தான். ஆனால் கிரிக்கெட் விளையாட்டு பற்றிய அவரது ஞானம் என்னவோ உலக நாடுகள் முழுவதிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒரு வீரருக்கான பக்குவமும், அலசலும் இருக்கும்.

தனது 19வது வயதில் அகில இந்திய வானொலிக்காக குரல் கொடுத்த இவர், 1992இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் வர்ணனையாளர் லிஸ்டில் இடம்பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

1995 முதல் கிரிக்கெட் விளையாட்டு தொகுத்து வழங்குதல், வர்ணனை செய்தல் பணிகள் செய்து வரும் ஹர்ஷா போக்லே, உலகின் சிறந்த வர்ணனையாளர் என்ற பெயர் எடுத்திருப்பதோடு, கிரிக்கெட் விளையாடாத ப்யூர் வர்ணனையாளர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.

2009 முதல் ஐபிஎல் தொடரின் அனைத்து சீசன்களிலும் வர்ணனையாளர், தொகுப்பாளராக இருந்து வரும் ஹர்ஷா போக்லே, இந்திய வீரர்களை விமர்சித்ததாக எழுந்த புகார் காரணமாக பிசிசிஐ வர்ணனையாளர் லிஸ்டில் இருந்து நீக்கப்பட்டார்.

கிரிக்கெட் விளையாட்டு தவிர பிபிசி டிவியில் டிராவில் சீரியல் ஒன்று தொகுத்து வழங்கும் போக்லே இந்தியன் எக்ஸ்பிரஸ், ஸ்போர்ட்ஸ் ஸ்டோர் ஊடகங்களில் காலமிஸ்டாக இருக்கிறார்.

ஹர்ஷா போக்லா பல்வேறு புத்தகங்களையும் எழுதியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதின் சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார். இதுதவிர விளையாட்டு தொடர்பாக யாரும் நினைத்து பார்க்க முடியாத புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

பேச்சில் தெளிவு, சரியான கணிப்பு, நேர்மறையான விமர்சனம், தீர்வளிக்கும் ஆலோசனை, அலசல் போன்றவை ஹர்ஷா போக்லே வர்ணனையின் ஸ்பெஷலாக இருக்கும். இதுவே ரசிகர்களை வெகுவாக கவரவும் காரணமாக அமைந்தது.

ஸ்டார் வீரர்கள் இவர் பேட்டி காணும் விதத்தை பார்க்கையில் உரையாடல் நீண்ட நேரம் தொடரும் உணர்வை ஏற்படுத்துவார். குறிப்பாக மனம் கவர்ந்த வீரர் பார்க்கும் மகிழ்ச்சி ஒரு புறம் என்றால், அவரது வாயில் இருந்து இல்லாமல், மனதில் இருந்து நேர்மையான பதிலை சொல்லும் goosbumpsகளை உருவாக்கும் விதமாக அவர்கள் பதில் சொல்ல வைப்பதில் கெட்டிக்காரராக இருப்பார்.

இந்த சீசனில் தோனி - ஹர்ஷா போக்லே இடையிலான உரையாடல் பற்றி தனியாக விவாதமே நடத்தும் அளவில் அவரிடம் கேள்விகளை தொடுத்திருப்பார். குறிப்பாக தோனி விளையாடிய இடமெல்லாம் ரசிகர்கள் கூட்டம் கடல் போல் நிரம்பி அவருக்கு விசில் அடிக்க, தோனியின் ஓய்வு குறித்து பல்வேறு கேள்விகளும் தொடுக்கப்பட்டது.

எல்லா கேள்விகளையும் தோனி திறமையாக கையாண்ட போதிலும், ஓய்வு பற்றி அவரது மனதில் இருந்ததை வெளிப்படையாக உலகம் அறிய செய்ததில் ஹர்ஷா போக்லேவின் பங்கு அளப்பறியது.

சுருக்கமாக சொல்வதென்றால் 1995 காலகட்டத்துக்கு பிறகு இந்திய கிரிக்கெட்டை இவர் இல்லாமல் குறிப்பிடவே முடியாத. கிரிக்கெட் விளையாட்டின் பின்னணி குரலாக ஒலித்து வந்து கொண்டிருக்கும் ஹர்ஷா போக்லே இன்று தனது 62வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.