Asian Games Most Medal winner: இந்தியாவுக்காக ஆசிய விளையாட்டில் அதிக பதக்கம் வென்றது யார் தெரியுமா?
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இதுவரை அதிக விருதுகளை இந்தியாவுக்கு ஓட்டப்பந்தயத்தில் கிடைத்துள்ளது. இந் போட்டிக்காக விருதை அள்ளியவர் குறித்து பார்க்கலாம்.
ஆசிய விளையாட்டு போட்டிகள் 1951 முதல் நடைபெற்று வருகிறது. இதனை ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு முதன்முதலாக உருவாக்கப்பட்ட பிறகு இந்த தொடர் நடைபெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த போட்டி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட இந்த விளையாட்டுகள் ஓலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய விளையாட்டு நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
ஆசிய விளையாட்டில் இதுவரை இந்தியா 672 பதக்கங்களை வென்று மொத்த வெற்றியாளர்கள் லிஸ்டில் 5வது இடத்தில் உள்ளது. இதையடுத்து ஆசிய விளையாட்டு போட்டிகளில இரண்டு தசாப்தங்களில் விளையாடிய இந்திய அணியின் முன்னாள் ஓட்டப்பந்தய வீராங்கனையான பிடி உஷா 11 பதக்கங்களை வென்று அதிக பதக்கம் வென்றவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
பய்யோலி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் உஷா, 5 முறை ஆசிய விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளார். தனது அபார ஆட்டத்தால் பதக்கங்களை குவிக்கும் மங்கையாக இருந்துள்ளார்.
1982இல் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் தான் முதல் முறையாக பிடி உஷா அறிமுகமானார். சுமார் 30 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் நடைபெற்ற இந்த தொடரில் 100 மீட்டர் ஸ்பிரிண்ட் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றார். 11.95 விநாடிகளில் இலக்கை எட்டினார். அதேபோல் 200 மீட்டர் ஸ்பிரிண்ட் ஓட்டத்தில் 24. 32 விநாடிகளில் இலக்கை எட்டி இரண்டாவது வெள்ளி பதக்கத்தை வென்றார்.
இதைத்தொடர்ந்து 1986இல் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில், பிடி உஷாவின் விளையாட்டு கேரியரில் பெற்காலமாக அமைந்தது. இந்த போட்டிகளில் மட்டும் நான்கு தங்கம், ஒரு வெள்ளி என 5 பதக்கங்களை அள்ளினார்.
இரண்டு மணி இடைவெளியில் 200m, 400m, 400m hurdles, and 4x400m தொடர் ஓட்டம் என அடுத்தடுத்து பங்கேற்று தங்கம் வென்றது இன்றளவும் ஆசிய விளையாட்டில் சாதனையாக உள்ளது.
பின் 1990 ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற உஷா, இதில் பங்கேற்பதற்கு முன்னரே காயம் காரணமாக பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்தார். ஓய்வு எடுத்துவிடலாம் என்று முடிவெடுத்த அவர் பின்னர் அதை தள்ளி வைத்து விட்டு சீனாவின் பெய்ஜிங்கில் 1990இல் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் பங்கேற்றார்.
இந்த தொடரில் 400m, 4x100m relay மற்றும் 4x400m ஆகிய ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்றார். 1994இல் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற பிடி உஷா 4x400m தொடர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்றார்.
கடைசியாக 1998 ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற பிடி உஷா, பதக்கம் எதுவும் வெல்லவில்லை. இதுவே அவர் பதக்கம் வெல்லாத தொடராக அமைந்தது.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஒரு முறை கூட வெண்கலம் வெல்லாத பிடி உஷா, 11 பதக்கங்களை வென்று இந்தியாவுக்காக இந்த தொடரில் பதக்கம் வென்றவர்கள் லிஸ்டில் முதல் இடத்தில் உள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்