Canada Open 2023: காலிறுதிக்கு முன்னேறிய போபண்ணா ஜோடி! ஸ்பெயின், அர்ஜென்டினா இணையுடன் இன்று மோதல்
கனடா ஓபன் டென்னிஸ் போட்டியில் கலவை இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
கனடா ஓபன் டென்னிஸ் தொடர் கனடா நாட்டிலுள்ள மாண்ட்ரியல், டொரான்டோ, ஆன்டேரியா, கியூபெக் ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து மாண்ட்ரியல் நகரில் நடைபெற்ற ஆண்கள் கலப்பு இரட்டையர் பிரிவுக்கான மூன்றாவது சுற்று போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - ஆஸ்திரேலியா மேத்யூ எப்டென் ஜோடி, அமெரிக்காவின் ஜேமி முர்ரே - நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி ஆகியோர் மோதினர்.
இந்த போட்டியில் வெற்றி பெறுவோர் காலிறுதிக்கு முன்னேறுவார்கள் என்று இருந்த நிலையில் இரண்டு ஜோடியும் விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனாலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி போபண்ணா ஜோடி 6-3, 6-3 என்ற நேர் செட்களில் அமெரிக்கா, நியூசிலாந்து ஜோடியை வீழ்த்தியது. இதன் மூலம் காலிறுதிக்கு தகுதி பெற்றது.
இன்று இரவு 9.30 மணிக்கு நடைபெற இருக்கும் காலிறுதி போட்டியில் போபண்ணா ஜோடி, ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸ், அர்ஜென்டினாவின் ஹோராசியோ ஜெபலோஸ் ஜோடியை எதிர்கொள்கிறது.
கனடா ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த 5ஆம் தேதி தொடங்கியது. வரும் 13ஆம் இந்த தொடரின் இறுதி போட்டி நடைபெறவுள்ளது.
இந்தியா சார்பில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு தகுதி சுற்றில் களமிறங்கிய இளம் வீரர் சசிகுமார் முகுந்த், மால்டோவன் நாட்டு வீரர் ராடு ஆல்பட் எதிராக தோல்வியை தழுவினார். இதைத்தொடர்ந்து ஆண்களுக்கான கலப்பு இரட்டையர் பிரிவில் களமிறங்கிய இந்திய வீரர் ரோஹன் போபண்ணா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
நீண்ட பாரம்பரியம் மிக்க கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியா சார்பில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ராமநாதன் கிருஷ்ணன், 1968ஆம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்றார். அதேபோல் 1997, 2004 தொடரில் இந்தியாவின் முன்னாள் நட்சத்திர வீரர்களான லியாண்டர் பியஸ் - மகேஷ் பூபதி ஜோடி பட்டம் வென்றது. அதேபோல் மகேஷ் பூபதி கலப்பு இரட்டையர் பிரிவில் 2003, 2009 ஆகிய ஆண்டுகளில் பட்டம் வென்றார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்