தமிழ் செய்திகள்  /  Sports  /  Bopanna-ebden Sail Into Men's Doubles Final Of Miami Open

Miami Open 2024: அடுத்த கோப்பையை நெருங்கிய போப்பண்ணா! மியாமி ஓபனில் இறுதிக்கு தகுதி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 29, 2024 05:36 PM IST

இந்த ஆண்டின் தொடக்கத்திஸ் ஆஸ்திரேலியா ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற போப்பண்ணா, தற்போது இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை நெருங்கியுள்ளார். மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் மேத்யூ எப்டனுடன் இணைந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

மியாமி ஓபன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற போப்பண்ணா - எப்டன் ஜோடி
மியாமி ஓபன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற போப்பண்ணா - எப்டன் ஜோடி (Getty Images via AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

இதில் அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் மார்செல் கிரானோலர்ஸ், அர்ஜெண்டினா வீரர் ஹோராசியோ ஜெபலோஸ் ஜோடியை இந்திய - ஆஸ்திரேலியா ஜோடியான போப்பண்ணா, எப்டன் ஆகியோர் எதிர்கொண்டனர்.

இறுதிப்போட்டியில் போப்பண்ணா ஜோடி

இந்த போட்டியில் தொடக்கம் முதல் இந்திய - ஆஸ்திரேலியா ஜோடி ஆதிக்கம் செலுத்தும் விதமாக விளையாடினார். இதன் விளைவாக முதல் இரண்டு செட்களையும் தன் வசமாக்கி நேர் செட்களில் வெற்றி பெற்றனர்.

போப்பண்ணா ஜோடி இந்த போட்டியில் 6-1 6-4 செட்களில் ஸ்பெயின் - அர்ஜெண்டினா ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மீண்டும் டாப் இடத்துக்கு முன்னேறியே போப்பண்ணா

இந்த தொடருக்கு முன்னர் நடைபெற்ற துபாய் சாம்பியன்ஷிப்பில் காலிறுதியிலும், இந்தியன் வெலஸ் மாஸ்டர் தொடரில் முதல் சுற்றிலும் வெளியேறியதால் முதல் இரட்டையர் ரேங்கிங்கில் முதல் இடத்தில் இருந்த போப்பண்ணா, இரண்டாவது இடத்துக்கு சென்றார்.

இதைத்தொடர்ந்து தற்போது மியாமி ஓபன் தொடரில் அரையிறுதியில் வென்றிருக்கும் அவர் மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

முன்னதாக, ஜனவரி மாதத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் தொடரை வென்ற பின்னர், 44 வயதாகும் போப்பண்ணா ஏடிபி ரேங்கிங்கில் முத்ல இடத்துக்கு முன்னேறினார். அத்துடன் அதிக வயதில் முதல் இடத்தை பிடிக்கும் வீரர் என்ற தனித்துவ சாதனையும் புரிந்தார்

போப்பண்ணா - எப்டன் ஜோடி இறுதிப்போட்டியில் குரோஷியா வீரர் இவான் டோடிக், அமெரிக்கா வீரர் ஆஸ்டின் கிராஜிசெக் ஜோடியை எதிர்கொள்ள இருக்கிறார்கள்.

முதல் இறுதிப்போட்டி

போப்பண்ணாவுக்கு இது 14வது ஏடிபி மாஸ்ட்ஸ் 1000 இறுதிப்போட்டியாக உள்ளது. அத்துடன் முதல் முறையாக மியாமி ஓபன் இறுதிப்போட்டியில் களமிறங்க இருக்கிறார். இதுவரை போப்பண்ணா 25 டபுள்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.

அதேபோல் போப்பண்ணா - எப்டன் ஜோடி ஐந்தாவது முறையாக ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 இறுதிப்போட்டியில் விளையாட இருக்கிறது.

போப்பண்ணா மற்றொரு அரிய சாதனை ஒன்றையும் புரிந்துள்ளார். ஏடிபி மாஸ்ட்ரஸ் டென்னிஸல் போட்டிகளில் லியாண்டர் பேஸ்க்கு அடுத்தபடியாக 9வது ஏடிபி மாஸ்டர்ஸ் போட்டிகளின் இறுதியில் விளையாடும் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா ஓபன் பட்டத்தை வென்றிருக்கும் போப்பண்ணா, அடுத்த கிராண்ட் ஸ்லாம் படத்தை நெருங்கியுள்ளார். இதை வெல்லும் பட்சத்தில் முதல் மியாமி ஓபன் தொடரை அவை கைப்பற்றுவார்.

மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ், எலெனா ரிபாகினா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு, மகளிர் இரட்டையர் பிரிவுக்கான அரையிறுதி போட்டி நாளை நடைபெற இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்