Afg vs Aus T20 world cup:ஆப்கானை வீழ்த்தி இலங்கை வெற்றிக்காக ஆஸி. காத்திருப்பு
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Afg Vs Aus T20 World Cup:ஆப்கானை வீழ்த்தி இலங்கை வெற்றிக்காக ஆஸி. காத்திருப்பு

Afg vs Aus T20 world cup:ஆப்கானை வீழ்த்தி இலங்கை வெற்றிக்காக ஆஸி. காத்திருப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 05, 2022 01:00 PM IST

அரையிறுதிக்கான வாய்ப்பை பெற்று தரும் முக்கியமான ஆட்டத்தில் கேப்டன் பின்ச் அணியில் இடமபெறாத நெருக்கடியில் எந்தவொரு அற்புதத்தையும் ஆஸ்திரேலியா நிகழ்த்தவில்லை. ஆப்கானிஸ்தானை வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய இலங்கை வெற்றியை எதிர்நோக்கியுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் கைகுலுக்கி கொண்ட ஆஸ்திரேலியா கேப்டன் மாத்யூ வேட் (இடது),  ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கான் (வலது)
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் கைகுலுக்கி கொண்ட ஆஸ்திரேலியா கேப்டன் மாத்யூ வேட் (இடது), ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கான் (வலது) (AP)

தொடர்ந்து சொதப்பி வந்த மேக்ஸ்வெல் முக்கியதுவம் வாய்ந்த இந்தப் போட்டியில் விஸ்வரூபம் எடுத்து 32 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவருக்கு அடுத்தபடியாக மிட்செல் மார்ஷ் 45, டேவிட் வார்னர் மற்றும் ஸ்டோய்னிஸ் ஆகியோர் 25 ரன்கள் எடுத்தனர்.

ஆப்கானிஸ்தான் பெளலர் நவீன் உல் ஹக் அற்புதமாக பந்து வீசி 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

அச்சுறுத்தும் ஆஸ்திரேலியா பெளலிங்குக்கு எதிராக 169 ரன்கள் இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக சேஸ் செய்தனர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான குலபதீன் நயீப் 39, ரஹ்மனுல்ல குர்பாஸ் 30, இம்ராஹிம் ஸத்ரன் 26 என அணிக்க நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.

இதன் பின்னர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுக்க ஆட்டம் ஆஸ்திரேலியா பக்கம் திரும்பியது. அப்போது பேட் செய்ய வந்த பெளலிங் ஆல்ரவுண்டர் ரஷித் கான் தொடக்கம் முதலே அதிரடி காட்ட தொடங்கினார். இதனால் மறுபடியும் ஆப்கானிஸ்தான் பக்கம் வெற்றி வாய்ப்பு எட்டி பார்த்தது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவை இருந்தபோது அந்த ஓவரில் ரஷித்கான் 17 ரன்கள் விளாசினார். இதனால் ஆஸ்திரேலியா 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தற்போது 7 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அணி குரூப் 1 பிரிவில் 2வது இடத்தில் இருந்தாலும் நெட் ரேட் அடிப்படையில் மூன்றாவது இடத்தில் 5 புள்ளிகளுடன் உள்ள இங்கிலாந்தை விட பின்தங்கியுள்ளது.

இன்று இங்கிலாந்து - இலங்கை இடையேயான போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும். ஆனால் இங்கிலாந்து வெற்றி பெற்றால் புள்ளிகள் அடிப்படையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து 7 என சமநிலையில் இருந்தாலும், ரன்ரேட் கணக்கின்படி இங்கிலாந்து அரையிறுதி வாய்ப்பை பெறும்.

எனவே இன்றைய போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை, மாறாக இலங்கை வெற்றி பெற்றால் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அரையிறுதியில் விளையாடும்.

அந்த வகையில் ஆஸ்திரேலியா வீரர்கள், ரசிகர்கள் இலங்கையின் வெற்றியை எதிர்நோக்கி உள்ளார்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.