Nirmala Sheoran: தடகள வீராங்கனை நிர்மலா ஷியோரனுக்கு 8 ஆண்டுகள் தடை! நாடா அதிரடி உத்தரவு
இரண்டாவது முறையாக விதமீறலில் ஈடுபட்ட தடகள வீராங்கனை நிர்மலா ஷியோரனுக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பான நாடா 8 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் நிர்மலா ஷியோரன் தோல்வியடைந்தார். இதற்காக அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தடைக்கு பின் கடந்த ஆண்டில் புவனேஸ்வரில் நடைபெற்ற தேசிய மாநிலங்களுக்கு இடையேயான சாம்பியன்ஷிப் போட்டியில் களமிறங்கினார்.
இதையடுத்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பான நாடா பிறப்பித்த உத்தரவில், ஷியோரனின் தடை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7 முதல் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த முறை, 28 வயதாகும் தடகள வீராங்கனையான நிர்மலா ஷியோரன் தடை செய்யப்பட்ட அனபோலிக் ஆண்ட்ரோஜெனிக் ஸ்டெராய்டுகள் (ஏஏஎஸ்) மற்றும் டெஸ்டோஸ்டிரோன் (டி) ஆகியவற்றை பயன்படுத்தியது உறுதியாகியுள்ளது. இந்த இரண்டு பொருள்களும் செயல்திறனை அதிகரிக்கும் விதமாக வலிமையை பெற உதவுகின்றன. இதில் ஏஏஎஸ் என்று அழைக்கப்படும் அனபோலிக் ஆண்ட்ரோஜெனிக் ஸ்டெராய்டு மனிதனால் உருவாக்கப்பட்ட டெஸ்டோஸ்டிரோனாகவும், முதன்மை ஆண் ஹார்மோனாகவும் உள்ளது.
இதற்கிடையே நிர்மால ஷியோரன் தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என தெரிகிறது. 2018ஆம் ஆண்டில் தனது முதல் தடைக்கு முன்பு, நிர்மலா இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனைகளில் ஒருவராக திகழ்ந்தார்.
2017ஆம் ஆண்டு புவனேஸ்வரில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் பெண்களுக்கன 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கம் வென்றார். ஆனால் ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வியுற்றதால் அவரது பதக்கம் பறிக்கப்பட்டது.
2016ஆம் ஆண்டில் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் பெண்களுக்கான 400 மீட்டர் மற்றும் 4×400 மீட்டர் ரிலே ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்றார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்