Asian Shooting Championships: தங்கம், வெள்ளியை வாரி சுருட்டிய இந்திய வீரர்கள்! அணி நிகழ்விலும் இந்தியாவுக்கு பதக்கம்-asian shooting championships akhil sheoran wins gold medal in 50m 3p india team clinc gold - HT Tamil ,விளையாட்டு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asian Shooting Championships: தங்கம், வெள்ளியை வாரி சுருட்டிய இந்திய வீரர்கள்! அணி நிகழ்விலும் இந்தியாவுக்கு பதக்கம்

Asian Shooting Championships: தங்கம், வெள்ளியை வாரி சுருட்டிய இந்திய வீரர்கள்! அணி நிகழ்விலும் இந்தியாவுக்கு பதக்கம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 13, 2024 05:16 PM IST

ஆசிய தகுதி சுற்றுக்கான போட்டியின் இந்தியாவின் வீரர்கள், வீராங்கனைகள் என சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்கள். தற்போது வரை இந்தியா 24 பதக்கங்களை தன் வசம் வைத்துள்ளது.

ஆசிய துப்பாக்கி சுடுதலில் தங்க பதக்கம் வென்ற இந்திய அணி
ஆசிய துப்பாக்கி சுடுதலில் தங்க பதக்கம் வென்ற இந்திய அணி

இதையடுத்து ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறும் பல்வேறு விளையாட்டுகளுக்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. அதன்படி பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், துப்பாக்கி சுடுதல் போட்டிக்கான தகுதி சுற்று நடைபெற்று வருகிறது. 

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெறும் ஆசிய சாம்பியன்ஷிப் தகுதி சுற்று போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இதையடுத்து ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபில் 3 பொசிஷன் பிரிவு இறுதி போட்டியில் இந்தியாவின் அகில் ஷியோரன் 460.2 புள்ளிகளுடன் தங்க பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 459 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபில் 3 பொசிஷன் பிரிவு அணிகள் பிரிவில் அகில் ஷியோரன், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், சுவப்னில் குஷாலே ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1,758 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றது. இந்த தொடரில் இதுவரை இந்தியா 10 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கல என 24 பதக்கங்களை வென்றுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.