Asian Games: துப்பாக்கி சுடுதலில் இரண்டு தங்கம் உள்பட மூன்று பதக்கங்களை அள்ளிய இந்தியா
ஆசிய விளையாட்டு போட்டியில் நான்காம் நாளான இன்று துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு இரண்டு தங்கம், ஒரு வெண்கலம் கிடைத்துள்ளது.
ஆசிய விளையாட்டில் மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர், இஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,759 புள்ளிகளை பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
இதைத்தொடந்து 50மீ ரைபிள் 3 பொசிஷன் பெண்கள் அணியில் இறுதிப்போட்டியில் சிஃப்ட் கௌர் சாம்ரா 469.6 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். இதை போட்டியில் இந்தியாவின் ஆஷி சோக்ஷிக் 451.9 புள்ளிகளை பெற்று வெண்கலம் வென்றார்.
சீன வீராங்கனை 462.3 புள்ளிகளை பெற்று வெள்ளிப் பதக்கத்தை தட்டி சென்றார். இன்று ஒரே நாளில் மட்டும் இந்தியாவுக்கு துப்பாக்கி சுடுதலில் மூன்று பதக்கங்கள் கிடைத்துள்ளது.
19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை கோலாகலமாக தொடங்கிய விளையாட்டு போட்டிகள் மூன்று நாள்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் இந்தியா இதுவரை இந்தியா 5 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் பதக்கங்களை வென்று மொத்தம் 22 பதக்கங்களுடன் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
123 பதக்கங்களை வென்று முதல் இடத்தில் சீனா தொடர்ந்து நீடிக்கிறது. கொரிய 59, ஜப்பான் 55 பதக்கங்களுடன் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளது. நான்காவது இடத்தில் இருக்கும் ஹாங்காங், சீனா 25 பதக்கங்களை வென்றுள்ளது.
ஐந்தாவது இடத்தில் இருக்கும் இந்தியாவுக்கும், ஹாங்காங் சீனாவுக்கும் 3 பதக்கங்களே வித்தியாசம் உள்ளன. தற்போதைய நிலையில் உஸ்பெகிஸ்தான் அணியும் 22 பதக்கங்களை வென்ற இந்தியாவுக்கு இணையாக உள்ளது.
அந்த அணி இந்தியாவை விட குறைவான வெள்ளி பதக்கத்தை வென்றிருப்பதால் புள்ளிப்பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்