Asian Games 2023: ப்ரீ ஸ்டைல் மல்யுத்த விளையாட்டில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள்
ஆசிய விளையாட்டு ப்ரீ ஸ்டைல் மல்யுத்த போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளது. மகளிருக்கான 76 கிலோ மற்றும் 62 கிலோ எடைப்பிரிவில் பதக்கங்கள் கிடைத்துள்ளன.
ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. பல்வேறு போட்டிகளில் இந்தியா பதக்க வேட்டை நடத்தி வருகிறது. இதையடுத்து ஆசிய விளையாட்டின் 13வது நாளான இன்று 41 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்து.
இதைத்தொடர்ந்து மகளிர் ப்ரீ ஸ்டைல் மல்யுத்த போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளது. அதன்படி 76 கிலோ எடைப்பிரிவில் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்திய வீராங்கனை கிரண், மங்கோலியாவை சேர்ந்து அரியுன்ஜார்கா கண்பத் என்பவரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இதேபோல் 62 கிலோ எடைப்பிரிவு போட்டியில் இந்தியாவின் சோனம் மாலிக், சீனா வீராங்கனையான ஜியா லாங் என்பவை வீழ்த்தி வெண்கலம் வென்றார்.
ப்ரீ ஸ்டைல் மல்யுத்த போட்டியில் மட்டும் இந்தியாவுக்கு ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்த வெற்றியின் மூலம் இந்தியா பதக்க பட்டியலில் 93 பதக்கங்களுடன் தொடர்ந்து நான்காவது இடத்தில் நீடிக்கிறது.
தற்போது வரை 21 தங்கம், 33 வெள்ளி, 39 வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது. இன்னும் கபடி, ஹாக்கி, கிரிக்கெட் உள்பட சில போட்டிகளில் இந்திய அணி பதக்கத்தை உறுதி செய்திருக்கும் நிலையில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 100 மேல் கண்டிப்பாக உயரக்கூடும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்