ISSF World Cup 2024: இந்திய மகளிர் கலக்கல் ஆட்டம்! கலப்பு பிரிவில் தங்கம் - பதக்க மழையில் இந்திய அணி
ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பின் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை தொடரில் ஜூனியர் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தேவன்ஷி தாமா தங்கம், லக்ஷிதா வெள்ளி பதக்கமும் வென்றுள்ளனர்.
ஸ்பெயின் நாட்டின் கிரென்டாவில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு (ஐஎஸ்எஸ்எஃப்) உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாவது நாளில் பெண்கள் ஜூனியருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தேவன்ஷி தாமா தங்கமும், லக்ஷிதா வெள்ளி பதக்கமும் வென்றுள்ளனர்.
இறுதிப் போட்டியில் எட்டு பேர் பங்கேற்ற நிலையில், தேவன்ஷி 240.0, லக்ஷிதா 238.0 புள்ளிகள் பெற்றனர். இந்தியா இந்த தொடரில் ஏற்கனவே நான்கு தங்கம், மூன்று வெள்ளி மற்றும் இரண்டு வெண்கல பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
முதல் நாளில் ஜூனியர் ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் உமாமகேஷ் மதினேனி, பார்த் மானே, அஜய் மாலிக் ஆகியோரும், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இஷா அனில் தக்சலே தங்கமும், ஷம்பவி ஷிர்சாகர் வெண்கலமும் வென்றனர்.
கலப்பு அணி ரைபிள் பிரிவில் இஷா-உமாமகேஷ், அன்வி ரத்தோட்-அபினவ் ஷா ஜோடி 1-2 என சமநிலை பெற்றது.
ஜூனியர் ஆண்கள் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் பராஸ் கோலா 561 புள்ளிகளுடன் 15வது இடம் பிடித்தார். ஜூனியர் பெண்கள் பிஸ்டல் பிரிவில் திருஷ்டி சங்வான் 563 புள்ளிகள் பெற்று 9வது இடத்தை பிடித்தார்.
சக வீராங்கனைகளான லக்ஷிதா, தேவன்ஷி ஆகியோர் 579 மற்றும் 572 புள்ளிகள் பெற்று தகுதிச் சுற்றில் இரண்டாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்தனர். இதுவரை 4 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 9 பதக்கங்களுடன் முதல் இடத்தில் இந்தியா இருந்து வருகிறது.
இந்தியாவின் சீனியர் அணி வீரர், வீராங்கனைகள் தங்களது முதல் போட்டியை வெள்ளிக்கிழமை விளையாடுகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்