Cincinnati Masters Tennis: சின்சினாட்டி மாஸ்டர்ஸில் இருந்து விலகிய ஆன்டி முர்ரே
கடந்த ஆண்டு விம்பிள்டனுக்கு முன்பு ஸ்டட்கார்ட்டில் நடந்த போட்டியில் எனக்கு இதே போன்ற பிரச்சனை ஆன்டி முர்ரேவுக்கு இருந்தது.
வயிற்று வலி காரணமாக வெஸ்டர்ன் மற்றும் சதர்ன் ஓபனில்/சின்சினாட்டி மாஸ்டர்ஸ் போட்டியில் இருந்து பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) விலகினார்.
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெறும் போட்டி சின்சினாட்டி ஓபன் என்றழைக்கப்படுகிறது. இந்தப் போட்டி கடந்த 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதே பிரச்சனை காரணமாக கடந்த வாரம் டொராண்டோவில் ஜானிக் சின்னருக்கு எதிரான தனது மூன்றாவது சுற்று போட்டியில் இருந்து விலகியிருந்தார். தற்போது ரஷ்ய வீரர் கரேன் கச்சனோவுடன் விளையாடவில்லை.
"கடந்த ஆண்டு விம்பிள்டனுக்கு முன்பு ஸ்டட்கார்ட்டில் நடந்த போட்டியில் எனக்கு இதே போன்ற பிரச்சனை இருந்தது, இதனால் நான் குயின்ஸ் கிளப் போட்டியை இழக்க நேரிட்டது. என்னால் விம்பிள்டனில் விளையாட முடிந்தது. நான் மீண்டும் நன்றாக உணர எனக்கு சுமார் 10 முதல் 12 நாட்கள் ஆனது.
இது அவ்வளவு மோசமானது அல்ல, ஆனால் நீங்கள் அதில் போட்டியிட்டு விளையாடினால் ஆபத்து என்னவென்றால், நீங்கள் அதை மோசமாக்குகிறீர்கள். எனவே, வரும் நாட்களில் இது எவ்வாறு உருவாகிறது என்பதை நான் பார்க்க வேண்டும், சில நாட்களில் நன்றாக உணர்கிறேன். நான் மிகவும் வருந்துகிறேன்" என்று ஆன்டி முர்ரே தெரிவித்தார்.
கனடா ஓபனில் இரண்டு மணி நேரம், 47 நிமிட போராட்டத்திற்குப் பிறகு இரண்டாவது சுற்றில் மேக்ஸ் பர்செலை தோற்கடித்ததன் மூலம் தனது போராட்ட குணத்தை வெளிப்படுத்தினார். அந்த போட்டியில் இருந்து விலகிய பின்னர் அவர் சின்சினாட்டிக்கு பயணம் செய்தார்.
ஏடிபி தரவரிசையில் முர்ரே 36-வது இடத்தில் உள்ளார்.
பிரெஞ்ச் ஓபன் 2023 காலிறுதியில் நோவக் ஜோகோவிச்சிடம் தோற்ற பிறகு கச்சனோவ் பங்கேற்கவில்லை. 27 வயதான இவர் காயம் காரணமாக ஓரங்கட்டப்பட்டு, தற்போது முர்ரேவுக்கு பதிலாக விளையாட உள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்