HBD Mardy Fish: ஹார்ட் கோர்ட் களத்தில் கில்லியாக செயல்பட்ட வீரர்! அமெரிக்கா டென்னிஸில் கவனம் ஈரத்த மார்டி பிஷ்
உலக அளவில் புகழ்பெற்ற பல்வேறு டென்னிஸ் தொடர்களில், பைனல் வரை தகுதி பெற்று தோல்வியை தழுவியபோதிலும் சிறந்த ஆட்டத்தால் கவனத்தை ஈர்த்த அமெரிக்க வீரராக இருந்து வருபவர் மார்டி பிஷ்.
அமெரிக்காவில் புகழ் பெற்ற டென்னிஸ் வீரராக இருந்து வந்தவர் மார்டி பிஷ். 2000ஆவது ஆண்டு தொடக்கத்தில் இருந்து விளையாடி வந்த இவர் கான்கிரீட் தளமாக இருந்து வரும் ஹார்ட் கோர்ட் ஸ்பெஷலிஸ்டாக இருந்து வந்துள்ளார். அந்த வகை மைதானங்களில் ஏராளமான வெற்றிகளை குவித்திருக்கும் அவர், மறக்க முடியாக ஆட்டத்தையும் விளையாடியுள்ளார்.
2000 முதல் 2015 வரை அமெரிக்கா புரொபெஷனல் டென்னில் வீரராக இருந்துள்ளார். ஏடிபி டூர்களில் ஆறு தொடர்களை வென்ற வீரராக இருந்து வரும் பிஷ், கிராண்ட் ஸ்லாம் தொடர்களான 2007 ஆஸ்திரேலியா ஓபன், 2008 யுஎஸ் ஓபன், 2011 விம்பிள்டன் சாம்பியன்ஷிப் தொடர்களில் காலிறுதி வரை முன்னேறியுள்ளார்.
2004இல் ஏதன்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இறுதி வரை தகுதி பெற்ற இவர், தோல்வியை தழுவினார். ஆனாலும் இவரது ஆட்டமானது சவால் மிக்கதாகவே இருந்தது.
டென்னிஸ் பயிற்சியாளரின் மகனான மார்டி பிஷ், சிறுவயதில் இருந்தே டென்னிஸ் விளையாட்டு விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 18 வயதில் இருந்து சர்வதேச டென்னிஸ் விளையாடி வரும் பிஷ், இரட்டையர் பிரிவில் இந்தியன் வெல்ஸ் பட்டத்தை 2009இல் வென்றுள்ளார். இதுதான் அவர் வென்ற ஒரே பட்டமாக உள்ளது.
ஒற்றையர் பிரிவில் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் தொடரில் 2003, 2010 என இரு ஆண்டுகள், 2008 இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ், 2011 கனடா ஓபன் ஆகிய தொடர்களில் இறுதி வரை முன்னேறி தோல்வியை தழுவியுள்ளார். அதேபோல் இத்தாலி ஓபன் இரட்டையர் பிரிவிலும் இறுதி வரை தகுதி பெற்ற போதிலும் பட்டம் வெல்லவில்லை.
2021இல் வெளியான நெட்பிளிக்ஸ் டாக்கு சீரிஸான அன்டோல்டு: பிரேக்கிங் பாயிண்ட தொடரில், தனது வாழ்க்கையில் கவலை மற்றும் மனசோர்வுடன் போராடியது பற்றி பிஷ் பகிர்ந்திருப்பார். டென்னிஸ் விளையாட்டு தவிர கோஃல்ப் விளையாட்டிலும் ஆர்வம் மிக்கவராக இருந்துள்ளார் பிஷ்.
அமெரிக்காவை சேர்ந்த டென்னிஸ் வீரர்களில் முக்கியமானவராக இருந்து வரும் மார்டி பிஷ், தனிப்போட்டிகளில் ஏரளமான வெற்றிகளை குவித்த வீரராக உள்ளார். ஹார்ட் கோர்ட் மைதானத்தில் கில்லியாக திகழ்ந்த வீரரான மார்டி பிஷ்க்கு இன்று பிறந்தநாள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்