Vijay Sethupathi: மணிகண்டன் - 'மாடர்ன் லவ்' ஸ்ரீகெளரி பிரியா இணையும் புதிய படம் - தொடங்கி வைத்த விஜய் சேதுபதி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay Sethupathi: மணிகண்டன் - 'மாடர்ன் லவ்' ஸ்ரீகெளரி பிரியா இணையும் புதிய படம் - தொடங்கி வைத்த விஜய் சேதுபதி

Vijay Sethupathi: மணிகண்டன் - 'மாடர்ன் லவ்' ஸ்ரீகெளரி பிரியா இணையும் புதிய படம் - தொடங்கி வைத்த விஜய் சேதுபதி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 04, 2023 12:02 PM IST

மணிகண்டன் - 'மாடர்ன் லவ்' ஸ்ரீகெளரி பிரியா இணையும் புதிய படத்தை கிளாப் அடித்து தொடங்கி வைத்துள்ளார் விஜய சேதுபதி. குட்நைட் படத்தை தயாரித்த நிறுவனம் பெயரிடப்படாத இந்தப் படத்தை தயாரிக்கிறது.

குட்நைட் பட தயாரிப்பாளர்களின் புதிய படத்தை தொடங்கி வைத்த விஜய்சேதுபதி
குட்நைட் பட தயாரிப்பாளர்களின் புதிய படத்தை தொடங்கி வைத்த விஜய்சேதுபதி

இந்த படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து புதிய படத்தை தயாரிக்கவுள்ளது.

இந்தப் படத்திலும் புதுமுக இயக்குநர் அறிமுகமாகிறார். பிரபு ராம் வியாஸ் என்பவர் எழுதி இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் குட்நைட் படத்தில் நடித்த மணிகண்டன் கதாநாயகனாக நடிக்கிறார். அமேசான் வெப்சீரிஸ் மாடர்ன்லவ் படப் புகழ் ஸ்ரீகெளரி பிரியா கதாநாயகியாக நடிக்கிறார். நடிகர் கண்ணா ரவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

படத்துக்கு இசை - ஷான் ரோல்டன். ஒளிப்பதிவு - ஸ்ரேயாஸ் கிருஷ்ணா. படத்தொகுப்பு - பரத் விக்ரமன். கலை -ராஜ்கமல். பாடல்கள் - மோகன்ராஜன்.

இளைஞர்களிடம் இருந்து வரும் தற்போதைய காதல், அதில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த விவாதத்தை ஏற்படுத்தும் விதமான சுவாரஸ்யமான திரைக்கதையை சொல்லக்கூடிய படமாக இது இருக்கும் என்கிறார் இயக்குநர் பிரபு ராம் வியாஸ்.

சென்னை, கோவா, கர்நாடகா மாநிலத்தில் அமைந்திருக்கும் கடலோர நகரமான கோகர்ணா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கியுள்ளது. முதல்நாள் படப்பிடிப்பை கிளாப் அடித்து தொடங்கிவைத்தார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தற்போது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.