HBD Aarthie Ramaswamy: செஸ் குருகுலத்தை நடத்தி வரும் கிராண்ட்மாஸ்டர் ஆர்த்தி ராமசாமி!
Chess: ஆர்த்தி ராமசாமி 2003 ஆம் ஆண்டில் இந்திய மகளிர் சாம்பியன்ஷிப்பை வென்றார், எஸ்.விஜயலட்சுமியை டைப்ரேக்கில் வீழ்த்தினார்.
செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆர்த்தி ராமசாமி 1981ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி சென்னையில் பிறந்தார். அவரது பிறந்த நாள் இன்று. 2003-இல் FIDE அமைப்பு அவருக்கு கிராண்ட்மாஸ்டர் (WGM) பட்டம் வழங்கியது.
அதிகபட்சமாக 2348 ரேட்டிங் வரை அவர் அடைந்தார். ஆர்த்தி ராமசாமி 1993-ம் ஆண்டு 12 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய சாம்பியன் பட்டத்தை வென்றார்.
1995-ம் ஆண்டு 14 மற்றும் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் 18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான தேசிய பட்டத்தை வென்றார்.
1999 ஆம் ஆண்டில், ஸ்பெயினின் ஒரோபெசா டெல் மார் நகரில் நடைபெற்ற உலக இளைஞர் சாம்பியன்ஷிப்பின் 18 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் ஆர்த்தி ராமசாமி வென்றார்.
2001 ஆம் ஆண்டில், பெண்கள் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றார். ஆர்த்தி ராமசாமி 2003 ஆம் ஆண்டில் இந்திய மகளிர் சாம்பியன்ஷிப்பை வென்றார், எஸ்.விஜயலட்சுமியை டைப்ரேக்கில் வீழ்த்தினார்.
இவர் இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆர்.பி.ரமேஷை திருமணம் செய்துகொண்டார்.
இவரும் இவரது கணவரும் இணைந்து செஸ் குருகுலம் என்ற பெயரில் செஸ் பயிற்சி பள்ளியை சென்னை தி.நகரில் நடத்தி வருகின்றனர்.
நாட்டின் சிறந்த கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்குவதில் பெயர் பெற்ற அகாடமி இது. இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஜோடி ஆர்த்தி மற்றும் ரமேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் வாயிலாகவும் செஸ் வகுப்பை செஸ் குருகுலம் வழங்குகிறது. மேலதிக விவரங்களுக்கு் https://chessgurukul.com/ என்ற இணையதள இணைப்பை சென்று நீங்கள் காணலாம்.
இந்த இணைப்பில் செஸ் சம்பந்தப்பட்ட நூல்களும் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த நூல்களை கிராண்ட்மாஸட்ர் ரமேஷ் எழுதியிருக்கிறார்.
சிறந்த செஸ் வீராங்கனையாக திகழ்ந்ததுடன் அடுத்த செஸ் தலைமுறையையும் உருவாக்கி வரும் கிராண்ட்மாஸ்டர் ஆர்த்தி ராமசாமிக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்