Rafael Nadal Birthday: ‘சிங்கம் சிங்கிளாதான் வரும்’ ‘கிங் ஆப் க்ளே' ரபேல் நடாலின் பிறந்தநாள் இன்று!
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Rafael Nadal Birthday: ‘சிங்கம் சிங்கிளாதான் வரும்’ ‘கிங் ஆப் க்ளே' ரபேல் நடாலின் பிறந்தநாள் இன்று!

Rafael Nadal Birthday: ‘சிங்கம் சிங்கிளாதான் வரும்’ ‘கிங் ஆப் க்ளே' ரபேல் நடாலின் பிறந்தநாள் இன்று!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 03, 2023 06:20 AM IST

அதனை சரி செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்திற்கும் எனது உடல் முழுமையாக ஒத்துழைக்கவில்லை. மேலும் 2024 தொழில்முறை டென்னிஸில் தனது இறுதி ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன் இது நான் எடுக்கும் முடிவு அல்ல, என் உடல் எடுக்கும் முடிவு

Rafael Nadal Birthday
Rafael Nadal Birthday

மிகவும் இளம் வயதிலேயே விம்பிள்டன் போட்டியின் 3 வது சுற்றுக்கு தேர்ச்சி பெற்றவரும் இவர்தான். அப்போது அவருக்கு வயது 17.

 நடால்
நடால்

2005ம் ஆண்டு முதல் 2014 ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 வருடங்களாக ஒருமுறை கூட கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை நடால் விட்டுக்கொடுத்ததில்லை. 2005 ஆம் ஆண்டில் அவர் தன்னுடைய முதல் முயற்சியிலேயே பிரெஞ்சு ஓபனை வென்ற போது அவர் தனது 19 வது பிறந்தநாளை கொண்டாடி இரண்டு நாட்களே ஆகியிருந்தது. 14 வது பட்டத்தினை அவர் வெல்லும் போது அவருக்கு வயது 36. அதன் காரணமாக அதிக வயதில் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றவர் என்ற பெருமையும் அவரையே சேர்ந்தது.

22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான இவர் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது மிகவும் அவதியுற்று வருகிறார். அதன் வெளிப்பாடே சமீபத்தில் அவர் செய்தியாளர்களிடம் தன்னுடைய ஓய்வை பற்றி மறைமுகமாக அறிவித்தது. செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது, “கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமாகவில்லை. அதனை சரி செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்திற்கும் எனது உடல் முழுமையாக ஒத்துழைக்கவில்லை. மேலும் 2024 தொழில்முறை டென்னிஸில் தனது இறுதி ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன் இது நான் எடுக்கும் முடிவு அல்ல, என் உடல் எடுக்கும் முடிவு" என்று பேசினார். அவரது பேச்சைக்கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

நடால்
நடால்

இந்தியாவில் ஒரு டென்னிஸ் பயிற்சிப் பள்ளியைத் துவங்கியுள்ள நடால் இடது கையால் டென்னிஸ் விளையாடும் பழக்கமும், வலது கையால் எழுதும் பழக்கமும் கொண்டவர். எந்த ஒரு பதக்கம் வென்றாலும் அதை பல்லால் கடித்துக் கொண்டாடுவது இவரின் தனிச்சிறப்பு. எப்போது பிரெஞ்சு ஓபன் கோப்பையை வென்றாலும் தரையில் விழுந்து அதை ஏற்றுக்கொள்ளும் பழக்கம் கொண்டவர். நடாலுக்கு பாட்டில் சென்டிமென்ட் அதிகம். ஆட்டம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை தன்னுடைய வாட்டர் பாட்டிலை யாரையும் தொட விடமாட்டார். ‘கிங் ஆப் க்ளே' என்கிற பட்டப்பெயர் உண்டு. களிமண் மைதானத்தில் இவர் வெளிப்படுத்தும் சிறப்பான ஆட்டத்திற்காக அவருக்கு இந்த பெயர் வந்தது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.