Vijay Ghilli Trisha: ‘அண்ணன்கள் கொலையாகிக் கொண்டிருக்க.. கொண்டாடிக் கொண்டிருந்த தனலெட்சுமி’ சர்சையில் த்ரிஷா!
- Trisha: அண்ணன்கள் கொலையாகிக் கொண்டிருந்தபோது, ஆட்டம் போட்டு கொண்டாடிக் கொண்டிருந்த தனலெட்சுமியிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா? இருந்தாலும் கதை தானே! த்ரிஷாவுக்காக தனலெட்சுமியை பொறுத்துக் கொள்வோம்!
- Trisha: அண்ணன்கள் கொலையாகிக் கொண்டிருந்தபோது, ஆட்டம் போட்டு கொண்டாடிக் கொண்டிருந்த தனலெட்சுமியிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா? இருந்தாலும் கதை தானே! த்ரிஷாவுக்காக தனலெட்சுமியை பொறுத்துக் கொள்வோம்!
(1 / 6)
Ghilli Trisha: கில்லி படத்தில் முக்கியமான கதாபாத்திரம் த்ரிஷா நடித்த தனலெட்சுமி கதாபாத்திரம். தெலுங்கில் பூமிகா நடித்த கதாபாத்திரம் என்றாலும், அதை விட 100 மடங்கு தனித்துவமாக செய்திருப்பார் த்ரிஷா. இன்னும் சொல்ல வேண்டுமானால், த்ரிஷாவின் கதாபாத்திரத்தை சுற்றி தான் மொத்த கதையும் நகரும் என்பதால், தனலெட்சுமி கதாபாத்திரம், கில்லிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
(2 / 6)
Ghilli Trisha: தனலெட்சுமி கதாபாத்திரம் படம் தொடங்கியது முதல், முடியும் வரை அழுது கொண்டே இருக்க வேண்டிய கதாபாத்திரம். அது இயக்குனர், நடிகை உள்ளிட்ட அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. அதை தெலுங்கில் பூமிகா கச்சிதமாக செய்திருப்பார். இயற்கையாகவே அவருக்கு அந்த முகம் பொருந்தும். ஆனால், த்ரிஷாவை அழுமூஞ்சியாக காண்பித்தால் எப்படி? அதற்காக தான், துவக்கத்தில் அவருக்கு ஒரு பாடல் வைத்து, அந்த பாடல் முழுக்க அவரை சிரிக்க வைத்திருப்பார் இயக்குனர் தரணி. அதன் பின், அவர் முகத்தில் சிரிப்பை பார்ப்பது சிரமம் தான்.
(3 / 6)
Ghilli Trisha: அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம், தன்னைச் சுற்றி கொடூர கொலைகள் நடந்து கொண்டிருக்க, எப்படி அந்த அளவிற்கு கொண்டாட முடியும்? என்பது தனலெட்சுமிக்கே வெளிச்சம். குறிப்பாக தன் குடும்பத்தில் ஒவ்வொருவராக செத்துக் கொண்டிருக்க, ‘ஷல்லலா.. ஷல்லலா..’ என்று குளத்தில் குதியாட்டம் போட முடியும்? போதாக்குறைக்கு ‘ஆசை கள்வன் எங்கே வருவானோ..’ என்று காதலனை தேடி முடியும்? அது கொஞ்சம் அல்ல,. பெரிய லாஜிக் மீறல் தான்!
(4 / 6)
Ghilli Trisha: வீட்டில் அனைவரும் இடிச்ச புளியாக இருக்க, த்ரிஷா மட்டும் அந்த புளியால் சுத்தம் செய்யப்பட்ட குத்துவிளக்கு போல இருப்பார். ‘செல்லம்.. செல்லம்’ என முத்துப்பாண்டி டார்ச்சர் இருக்கும் போது, குளத்தில் குதித்து ஆட்டம் போடு கேப்பில், குஜராத்திற்கு கூட தப்பியிருக்கலாம். போதாக்குறைக்கு அந்த பாடலில் அவரிடம் சைக்கிள் கூட இருக்கும். முடிந்தால், அதை எடுத்துக் கொண்டு கூட தலைமறைவாகியிருக்கலாம்.
(5 / 6)
Ghilli Trisha: தனலெட்சுமி ஒரு சோம்பேறி கதாபாத்திரம் மட்டுமல்ல, சோத்து மூட்டை கதாபாத்திரமாகவும் பார்க்கப்படுகிறது. உயிரை வைத்து போராடி சரவண வேலு, தனலெட்சுமியை லண்டன் அனுப்ப எல்லாம் தயார் செய்து விடுவார். போகிற போக்கில் ‘பானிப்பூரி’ கேட்டு டார்ஜெர் செய்வதெல்லாம் இந்த உலகில் தனலெட்சுமிகளால் மட்டுமே முடியும்! ஆனால், அதிலும் பொறுமை காட்டும் சரவண வேலுகள் தான், இந்த உலகின் பூமி தேவிகள்!
(6 / 6)
Ghilli Trisha: பல காட்சிகளில் தனலெட்சுக்கு பொறுப்பு இருக்காது. புவியோடு விளையாடுவது ஆகட்டும், வேலு வீட்டாரிடம் ஈஸியாக மாட்டிக் கொள்வதாகட்டும், எல்லாமே தனலெட்சுமியின் டம்மி பீஸ் ஐடியாக்களால் தான். தன்னை காப்பாற்ற சரவண வேலு இருக்கிறார் என்கிற அசட்டுத்தனமும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அண்ணன்கள் கொலையாகிக் கொண்டிருந்தபோது, ஆட்டம் போட்டு கொண்டாடிக் கொண்டிருந்த தனலெட்சுமியிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா? இருந்தாலும் கதை தானே! த்ரிஷாவுக்காக தனலெட்சுமியை பொறுத்துக் கொள்வோம்!
மற்ற கேலரிக்கள்