தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Trip Tips: Here Are The Budget-friendly Travel Destinations This March!

Trip Tips: இந்த மார்ச் மாதத்தில் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற சுற்றுலா தளங்கள் இதோ!

Feb 18, 2023 12:02 PM IST Pandeeswari Gurusamy
Feb 18, 2023 12:02 PM , IST

உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற இந்தியாவில் உள்ள சில சுற்றுலா தளங்கள் குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம் 

இந்தியாவில் சுற்றுலா செல்ல  சிறந்த மாதம் மார்ச் எனலாம். ஏனென்றால் மாரச் மாதம் சுற்றுலா செல்வதற்கு தகுந்த இதமான வெப்பம் மற்றும் குறைந்த மழை கொண்ட மாதம் ஆகும்.  

(1 / 6)

இந்தியாவில் சுற்றுலா செல்ல  சிறந்த மாதம் மார்ச் எனலாம். ஏனென்றால் மாரச் மாதம் சுற்றுலா செல்வதற்கு தகுந்த இதமான வெப்பம் மற்றும் குறைந்த மழை கொண்ட மாதம் ஆகும்.  (Unsplash)

கோவா ஒரு பிரபலமான கடற்கரை இடமாகும்,  வானிலை மிதமானதாக இருப்பதாலும், மக்கள் கூட்டம் குறைவாக இருப்பதாலும் இந்தியாவில் மார்ச் மாதம் சுற்றுலா செல்ல ஏற்ற நேரம். கோவாவில் அழகான கடற்கரைகள், நீர் விளையாட்டுகள் மற்றும் இரவு வாழ்க்கையை நீங்கள் அனுபவிக்க முடியும். இது இளம் வயதினருக்கான சிறந்த சுற்றுலா தலமாக பார்க்கப்படுகிறது. 

(2 / 6)

கோவா ஒரு பிரபலமான கடற்கரை இடமாகும்,  வானிலை மிதமானதாக இருப்பதாலும், மக்கள் கூட்டம் குறைவாக இருப்பதாலும் இந்தியாவில் மார்ச் மாதம் சுற்றுலா செல்ல ஏற்ற நேரம். கோவாவில் அழகான கடற்கரைகள், நீர் விளையாட்டுகள் மற்றும் இரவு வாழ்க்கையை நீங்கள் அனுபவிக்க முடியும். இது இளம் வயதினருக்கான சிறந்த சுற்றுலா தலமாக பார்க்கப்படுகிறது. (Unsplash)

உத்தரகாண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷ் ஆன்மீகம்,  யோகா மற்றும் தியானத்திற்கான பிரபலமான இடமாகும். இது கங்கை நதிக்கரையில் அமைந்துள்ளது. அழகான மலைகள் மற்றும் காடுகளால் சூழப்பட்டுள்ளது.அமைதியை தேடி செல்லும் பயணிகளுக்கான சிறந்த இடமாக ரிஷிகேஷ் பார்க்கப்படுகிறது 

(3 / 6)

உத்தரகாண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷ் ஆன்மீகம்,  யோகா மற்றும் தியானத்திற்கான பிரபலமான இடமாகும். இது கங்கை நதிக்கரையில் அமைந்துள்ளது. அழகான மலைகள் மற்றும் காடுகளால் சூழப்பட்டுள்ளது.அமைதியை தேடி செல்லும் பயணிகளுக்கான சிறந்த இடமாக ரிஷிகேஷ் பார்க்கப்படுகிறது (Unsplash)

கர்நாடகாவில் உள்ள ஹம்பி யுனெஸ்கோவின் அங்கீகாரம் பெற்ற உலக பாரம்பரிய தளம். கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில், துங்கபத்திரை ஆற்றின் கரையோரம் அழகாக அமைந்திருக்கிறது இந்த ஹம்பி நகரம்.  வரலாற்று சிதிலங்களும், கோயில்களும் கட்டிடக் கலையின் சொக்க பூமியாவும் திகழ்வதால் சுற்றுலா பயணிகள் இங்கு வர விரும்புவர் இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரம் குறித்த ஒரு பார்வையை வழங்குகிறது. இதனால் வரலாற்றில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கான சிறந்த சாய்ஸ் ஹம்பி  

(4 / 6)

கர்நாடகாவில் உள்ள ஹம்பி யுனெஸ்கோவின் அங்கீகாரம் பெற்ற உலக பாரம்பரிய தளம். கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில், துங்கபத்திரை ஆற்றின் கரையோரம் அழகாக அமைந்திருக்கிறது இந்த ஹம்பி நகரம்.  வரலாற்று சிதிலங்களும், கோயில்களும் கட்டிடக் கலையின் சொக்க பூமியாவும் திகழ்வதால் சுற்றுலா பயணிகள் இங்கு வர விரும்புவர் இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரம் குறித்த ஒரு பார்வையை வழங்குகிறது. இதனால் வரலாற்றில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கான சிறந்த சாய்ஸ் ஹம்பி  (Unsplash)

ஜெய்ப்பூர், ராஜஸ்தான்: "இளஞ்சிவப்பு நகரம்" என்று அழைக்கப்படும் ஜெய்ப்பூர், பல வரலாற்று கோட்டைகள் மற்றும் அரண்மனைகளைக் கொண்ட துடிப்பான மற்றும் வண்ணமயமான நகரமாகும். மார்ச் மாத வானிலை லேசானது, இனிமையானது, அனைத்து வயதினரும் பார்க்க இதமான நகரமாகும்

(5 / 6)

ஜெய்ப்பூர், ராஜஸ்தான்: "இளஞ்சிவப்பு நகரம்" என்று அழைக்கப்படும் ஜெய்ப்பூர், பல வரலாற்று கோட்டைகள் மற்றும் அரண்மனைகளைக் கொண்ட துடிப்பான மற்றும் வண்ணமயமான நகரமாகும். மார்ச் மாத வானிலை லேசானது, இனிமையானது, அனைத்து வயதினரும் பார்க்க இதமான நகரமாகும்(Unsplash)

வாரணாசி உலகின் பழமையான நகரங்களில் ஒன்றாகும், இது இந்தியாவின் ஆன்மீக தலைநகரமாக கருதப்படுகிறது. இந்த நகரம் பழங்கால கோவில்கள், மலைத்தொடர்கள் மற்றும் புனித நதி கங்கைக்கு பெயர் பெற்றது. மார்ச் மாதம் வாரணாசிக்கு செல்ல ஏற்ற காலமாகும். வானிலை இதமாக இருப்பதால், இந்த நேரத்தில் பல திருவிழாக்கள் நடைபெறுகின்றன. ஆன்மீக  பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஏற்ற இடமாகும்

(6 / 6)

வாரணாசி உலகின் பழமையான நகரங்களில் ஒன்றாகும், இது இந்தியாவின் ஆன்மீக தலைநகரமாக கருதப்படுகிறது. இந்த நகரம் பழங்கால கோவில்கள், மலைத்தொடர்கள் மற்றும் புனித நதி கங்கைக்கு பெயர் பெற்றது. மார்ச் மாதம் வாரணாசிக்கு செல்ல ஏற்ற காலமாகும். வானிலை இதமாக இருப்பதால், இந்த நேரத்தில் பல திருவிழாக்கள் நடைபெறுகின்றன. ஆன்மீக  பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஏற்ற இடமாகும்(Unsplash)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்