Savukku Shankar : சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர்.. மதுரை நீதிமன்றத்தில் நடந்தது என்ன? எத்தனை நாள் சிறை?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Savukku Shankar : சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர்.. மதுரை நீதிமன்றத்தில் நடந்தது என்ன? எத்தனை நாள் சிறை?

Savukku Shankar : சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர்.. மதுரை நீதிமன்றத்தில் நடந்தது என்ன? எத்தனை நாள் சிறை?

Dec 18, 2024 08:18 PM IST Stalin Navaneethakrishnan
Dec 18, 2024 08:18 PM , IST

  • நீதிமன்ற பிடிவாரண்டில் கைது செய்யப்பட்ட பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர், சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கைதில் இருந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டது வரை, என்ன நடந்தது? இதோ அந்த தகவல்கள் உங்களுக்காக!

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யும் பொழுது அவர் தங்கிய அறையில் கஞ்சா இருந்ததாக தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி போலீசார் அவர் மீது கஞ்சா வழக்கு ஒன்றை பதிவு செய்தனர்.

(1 / 6)

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யும் பொழுது அவர் தங்கிய அறையில் கஞ்சா இருந்ததாக தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி போலீசார் அவர் மீது கஞ்சா வழக்கு ஒன்றை பதிவு செய்தனர்.(HT Tamil)

தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் கைதான் அவர் மீது இரண்டு முறை குண்டர் தடுப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றத்தில் சட்டத்தை ரத்து செய்து ஜாமீன் வழங்கக் கோரி சவுக்கு சங்கர் தரப்பு நீதிமன்றத்தை நாடியது.

(2 / 6)

தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் கைதான் அவர் மீது இரண்டு முறை குண்டர் தடுப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றத்தில் சட்டத்தை ரத்து செய்து ஜாமீன் வழங்கக் கோரி சவுக்கு சங்கர் தரப்பு நீதிமன்றத்தை நாடியது.(HT Tamil)

ஜாமினில் வந்த பின், தான் அன்றாட பணிகளை சவுக்கு சங்கர் தொடர்ந்தார். இதற்கிடையில் மதுரை மாவட்டம் போதை பொருள் சிறப்பு தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு விசாரணையில் முறையாக ஆஜராகாததால் மதுரை மாவட்ட சிறப்பு போதைப்பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமல செல்வன், சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

(3 / 6)

ஜாமினில் வந்த பின், தான் அன்றாட பணிகளை சவுக்கு சங்கர் தொடர்ந்தார். இதற்கிடையில் மதுரை மாவட்டம் போதை பொருள் சிறப்பு தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு விசாரணையில் முறையாக ஆஜராகாததால் மதுரை மாவட்ட சிறப்பு போதைப்பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமல செல்வன், சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.(HT Tamil)

உத்தரவு வந்த சில மணி நேரங்களில்  சென்னை தேனாம்பேட்டையில் இருந்த சவுக்கு சங்கரை தேனி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நேற்று இரவு காவல்துறை பாதுகாப்புடன் தேனி அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மீண்டும் மதுரையில் உள்ள சிறப்பு போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக இன்று ஆஜர் செய்யப்பட்டார்.

(4 / 6)

உத்தரவு வந்த சில மணி நேரங்களில்  சென்னை தேனாம்பேட்டையில் இருந்த சவுக்கு சங்கரை தேனி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நேற்று இரவு காவல்துறை பாதுகாப்புடன் தேனி அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மீண்டும் மதுரையில் உள்ள சிறப்பு போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக இன்று ஆஜர் செய்யப்பட்டார்.(HT Tamil)

சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையின் போது முறையாக ஆஜராகாததால் கைது செய்யப்பட்ட யூடியுபர் சவுக்கு சங்கரை, டிசம்பர் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவை பிறப்பித்தார்.

(5 / 6)

சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையின் போது முறையாக ஆஜராகாததால் கைது செய்யப்பட்ட யூடியுபர் சவுக்கு சங்கரை, டிசம்பர் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவை பிறப்பித்தார்.(HT Tamil)

இதைத் தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டார். அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் போதும், திரும்ப சிறைக்கு அழைத்துச் செல்லும் போது பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது. 

(6 / 6)

இதைத் தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டார். அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் போதும், திரும்ப சிறைக்கு அழைத்துச் செல்லும் போது பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது. (HT Tamil)

மற்ற கேலரிக்கள்