‘உதயநிதி ஒரு பேரீச்சம் பழம்.. தம்பி வா.. தலைமை ஏற்க வா..’ கவிபாடி அழைத்த கவிஞர் வைரமுத்து!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ‘உதயநிதி ஒரு பேரீச்சம் பழம்.. தம்பி வா.. தலைமை ஏற்க வா..’ கவிபாடி அழைத்த கவிஞர் வைரமுத்து!

‘உதயநிதி ஒரு பேரீச்சம் பழம்.. தம்பி வா.. தலைமை ஏற்க வா..’ கவிபாடி அழைத்த கவிஞர் வைரமுத்து!

Nov 27, 2024 01:04 PM IST Stalin Navaneethakrishnan
Nov 27, 2024 01:04 PM , IST

  • ‘காலம் இவரை மேலும் மேலும் செதுக்கும்; புதுக்கும் “தம்பீ வா தலைமையேற்க வா” அண்ணாவிடம் கடன்வாங்கி அண்ணன் வாழ்த்துகிறேன்..’ என்று உதயநிதி ஸ்டாலின் குறித்து வைரமுத்து கவிபாடியுள்ளார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளான இன்று, அவருக்காக கவிஞர் வைரமுத்து ஒரு கவி பாடியிருக்கிறார். அதில் அவர் என்ன கூறியிருக்கிறார்? இதோ பார்க்கலாம்!

(1 / 5)

ஒருநாள் கலைஞரும் நானும் கோபாலபுரத்தில் உரையாடிக்கொண்டிருந்தோம். உதயநிதி தன் மனைவி கிருத்திகாவோடு வந்தார்; நின்றுகொண்டே பேசினார் கலைஞர் மறுத்த ஒருகருத்தை தன் வாதத்தை முன்னிறுத்திச் சாதித்துச் சென்றார்

(2 / 5)

அப்போதே தெரிந்துகொண்டேன் வலிவும் தெளிவும் மிக்க வல்லவர் இவரென்று உதயநிதி பேரீச்சம் பழம்போல் மென்மையானவர்; ஆனால் அதன் விதையைப்போல் உறுதியானவர்.

(3 / 5)

சின்னச் சின்ன எதிர்ப்புகள் இவரைச் சிதைப்பதில்லை. குன்றிமணி முட்டிக் குன்றுகள் சாய்வதில்லை. காலம் இவரை மேலும் மேலும் செதுக்கும்; புதுக்கும் “தம்பீ வா தலைமையேற்க வா” அண்ணாவிடம் கடன்வாங்கி அண்ணன் வாழ்த்துகிறேன்.

(4 / 5)

துணை முதல்வர் உதயநிதியின் பிறந்தநாளான இன்று பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், கவிஞர் வைரமுத்துவின் இந்த கவிமடல், அவரின் வழக்கமான பாணியில் அமைந்திருக்கிறது. அதை பலரும் லைக் செய்து வருகின்றனர்.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்