Sani Bhagavan: காகத்திற்கு இந்த உணவை வெச்சிடாதீங்க.. சனி பகவான் பார்வை உக்கிரமா இருக்குமாம்!
- Crows: நீங்கள் தினமும் காகங்களுக்கு சாதம் வைப்பவரா? தப்பித்தவறி இந்த உணவுகளை காகத்திற்கு வைத்து உங்களுக்கு நீங்களே ஆப்பு வைத்து கொள்ளாதீர்கள். எந்த உணவை வைக்கலாம், வைக்க கூடாது என்று பார்க்கலாம்.
- Crows: நீங்கள் தினமும் காகங்களுக்கு சாதம் வைப்பவரா? தப்பித்தவறி இந்த உணவுகளை காகத்திற்கு வைத்து உங்களுக்கு நீங்களே ஆப்பு வைத்து கொள்ளாதீர்கள். எந்த உணவை வைக்கலாம், வைக்க கூடாது என்று பார்க்கலாம்.
(1 / 8)
காகங்களுக்கு முக்காலத்தையும் அறியும் சக்தி உண்டு. ஒரு குடும்பத்தின் நல்லது, கெட்டதை முன்கூட்டியே அறியும் ஆற்றல் அதற்கு உண்டு என்கிறார்கள். அந்த காகங்களுக்கு எந்த உணவை படைக்க வேண்டும், படைக்க கூடாது என்று வறையறுத்துள்ளனர். அவற்றை பார்க்கலாம். (Pexels)
(2 / 8)
உலர் திராட்சைகளை காகங்களுக்கு வழங்கினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் வந்து சேரும். கஷ்டங்கள் தீர்ந்து செல்வம் சேரும். (Pexels)
(3 / 8)
காகங்களுக்கு நல்லெண்ணெய் வழங்கினால் சனி பகவான் பார்வையால் வரும் தீமைகள் குறையும் என்கிறார்கள். சாதத்துடன் நல்லெண்ணெய் சேர்த்து காகங்களுக்கு வழங்கலாம். (Pexels)
(4 / 8)
காகம் சனி பகவானின் வாகனம் என்பதால், அவற்றுக்கு எள் வழங்கினால் சனி பகவானின் அருள் கிடைக்கும். வீட்டுக்கு நன்மை கிட்டும். (Pexels)
(5 / 8)
காகத்திற்கு தீட்டு கடைபிடிக்கும் பழக்கம் உண்டு. காகங்கள் இறக்கும் போது அதைச் சுற்றி காகங்கள் சுற்றி வருவதும், அதன் பின் நீர் நிலைக்குச் சென்று குளிப்பதும் வழக்கம், பழைய சாப்பாடுகள் கட்டாயம் வழங்கக் கூடாது. (Pexels)
(6 / 8)
வீட்டில் மிச்சம் என்று ஆன உணவுகளை கட்டாயம் காகத்திற்கு வைக்க கூடாது. அது நம் முன்னோர்களின் பாவங்களை நமக்கு பெற்றுத் தரும். (Pexels)
(7 / 8)
காகங்களுக்கு எந்த காரணம் கொண்டும் அசைவ உணவுகள் வழங்கக் கூடாது. அது பெரும் பாவத்தை குடும்பத்திற்கு தரும். (Pexels)
மற்ற கேலரிக்கள்