Temple: ‘காலையில் கோபுர தரிசனம்.. கோடி புண்ணியம்..’ஏன் தெரியுமா?
- காலையில் எழுந்ததும், கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா?
- காலையில் எழுந்ததும், கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா?
(1 / 5)
கோயிலுக்கு அழகு தருவது கோபுரம் ஆகும். கோயில் வாசலில் அமைக்கப்படும் ராஜகோபுரமே மற்ற கோபுரங்களை விட உயரமாக இருக்கும். நெடுந்தொலைவிலிருந்து பார்த்தாலே இது கம்பீரமாகத் தெரியும் . இதை ஒரு லிங்கமாக எண்ணி வணங்குவதும் உண்டு. இதனை ஸ்தூல லிங்கம் என்று சொல்வது ஐதீகம்.
(2 / 5)
கோபுரம் இருக்கும் இடத்திற்கும், அது நம் பார்வையில் படும் இடத்திற்கும் இடைப்பட்ட இடத்தை பூலோக கைலாசம் என்றும் அழைக்கப்படும். ‘நின்று கோபுரத்தை நிலமுறப் பணிந்து நெடுந் திருவீதியை வணங்கி, கோபுரத்தைக் கண்டவுடன் நிலத்தில் வீழ்ந்து வணங்கவேண்டும்’ என்று பெரிய புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
(3 / 5)
கோபுரம் என்பது சமய வரலாறு, புராணக் கதைகள், தத்துவம் முதலிய பல செய்திகளை எடுத்துக்கூறும் உயிர்த்தன்மை கொண்ட உருவங்களாகவே உயர்ந்து நிற்கின்றன. கோபுரத்தில் தேவகணங்கள், தெய்வ உருவங்கள், பறவைகள், விலங்குகள், புராண, இதிகாசக் காட்சிகள், மனிதர்கள், தேவியர்கள், மெய்யடியார்கள் எனப் பலவகை சிற்பங்கள் இருக்கும்.
(4 / 5)
கோபுரம் என்பதற்கு இறைவனை நோக்கி ஆன்மாக்கள் செல்லும் வழி எனப் பொருள் கூறுவார். கருவறையின் மேல் உள்ள விமானம் சிரசாகவும், கோபுரம் இறைவனின் திருப்பாதமாகவும் கூறப்படும். திருமூலர் திருமந்திரத்தில் பின்வரும் பாடல் ஒன்றின் மூலம் இறைவனுக்கும் ஆன்மாவிற்கும் உள்ள தொடர்பைப் புலப்படுத்துகிறார். கோபுரம் என்பதை ‘கோ+புரம்’ என்று பிரிக்க வேண்டும். "கோ' என்றால் இறைவன். "புரம்' என்றால் "இருப்பிடம்'. இறைவனின் இருப்பிடமே கோபுரம்.
மற்ற கேலரிக்கள்