September 27 Release Movies : ‘அடேங்கப்பா.. இந்த வாரம் இத்தனை படம் ரிலீஸா?’ எந்த படத்துக்கு போகலாம்?-details of tamil movies releasing on september 27 dhil raja meiyazhagan devara sattam en kaiyil petta rap hitler - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  September 27 Release Movies : ‘அடேங்கப்பா.. இந்த வாரம் இத்தனை படம் ரிலீஸா?’ எந்த படத்துக்கு போகலாம்?

September 27 Release Movies : ‘அடேங்கப்பா.. இந்த வாரம் இத்தனை படம் ரிலீஸா?’ எந்த படத்துக்கு போகலாம்?

Sep 23, 2024 10:48 AM IST Stalin Navaneethakrishnan
Sep 23, 2024 10:48 AM , IST

  • Tamil New Movies : செப்டம்பர் 27 ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படங்களின் முழு விபரம் மற்றும் அவை பற்றிய சிறு குறிப்புகள் இதோ!

செப்டம்பர் 27 ம் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கும் திரைப்படங்களின் விபரமும், அவை பற்றிய சிறு குறிப்பையும் இங்கு அறியலாம். முக்கியமான திரைப்படங்களை இந்த வாரம் தியேட்டரில் கண்டு ரசிங்க. 

(1 / 7)

சூர்யா தயாரிப்பில் அர்விந்த் சாமி- கார்த்தி நடிக்கும் மெய்யழகன் திரைப்படம் செப்டம்பர் 27 ம் தேதி வெளியாகிறது. ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். சி.பிரேம் குமார் இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். 

(2 / 7)

ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் செப்டம்பர் 27 ல் வெளியாகவிருக்கும் திரைப்படம் தேவரா. சைத்ரா ராய், சயிப் அலி கான், சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். கொரட்டலா சிவா இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரூ.300 கோடி செலவில் இத்திரைப்படம் தயாராகியுள்ளது. 

(3 / 7)

சதீஷ், வித்யா பிரதீப், அஜய் ராஜ் நடிப்பில் செப்டம்பர் 27 ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் சட்டம் என் கையில். ஜாஜி இயக்கத்தில் வெளியாகஇருக்கும் இத்திரைப்படம், காமெடி நடிகராக நாம் பார்த்து பழகிய சதீஷிற்கு, ஆக்‌ஷன் அவதாரம் தரும் என்கிறார்கள். 

(4 / 7)

விஜய் ஆண்டனி நடிப்பில் செப்டம்பர் 27 ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ஹிட்லர். தனாவின் கதை திரைக்கதை இயக்கத்தில் வெளியாகும் இத்திரைப்படத்தில், ரியா சுமன், கெளதம் வாசுதேவ், ரெடின் கிங்ஸ்லி, சரண்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

(5 / 7)

பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம், செப்டம்பர் 27 ம் தேதி வெளியாக உள்ளது. எஸ்.ஜே.சினு இயக்கும் இத்திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். எதிர்பார்ப்புகளுடன் வெளியாகிறது பேட்ட ராப்.

(6 / 7)

விஜய் சத்யா, ஷெரின் நடித்திருக்கும் தில் ராஜா திரைப்படம், செப்டம்பர் 27 ம் தேதி வெளியாகிறது. இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கும் இத்திரைப்படத்தில், KPY பாலா காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அம்ரிஷ் இசையமைத்துள்ள இத்திரைப்படத்திற்கு சூப்பர் சுப்பராயன் சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்