Indian Cricketers Expensive Houses: இந்திய கிரிக்கெட்டர்களும் அவர்களின் காஸ்ட்லியான பங்களாக்களும்! கண்கவரும் புகைப்படம்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Indian Cricketers Expensive Houses: இந்திய கிரிக்கெட்டர்களும் அவர்களின் காஸ்ட்லியான பங்களாக்களும்! கண்கவரும் புகைப்படம்

Indian Cricketers Expensive Houses: இந்திய கிரிக்கெட்டர்களும் அவர்களின் காஸ்ட்லியான பங்களாக்களும்! கண்கவரும் புகைப்படம்

Jan 08, 2024 03:40 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 08, 2024 03:40 PM , IST

  • இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் ஸ்டார் வீரர்கள் அனைவரும் கோடிகளில் சம்பாதிக்கிறார்கள் என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். அவர்களின் சம்பாத்தியத்தில் அரண்மனை போன்று பிரமாண்ட பங்களாக்களையும் கட்டியுள்ளனர். இந்திய கிரிக்கெட்டர்களின் அழகிய பங்களாக்களின் புகைப்படங்களை பார்க்கலாம்

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் ஸ்டார் வீரர்கள் அனைவரும் கோடிகளில் சம்பாதிக்கிறார்கள் என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். அவர்களின் சம்பாத்தியத்தில் அரண்மனை போன்று பிரமாண்ட பங்களாக்களையும் கட்டியுள்ளனர். இந்திய கிரிக்கெட்டர்களின் அழகிய பங்களாக்களின் புகைப்படங்களை பார்க்கலாம்

(1 / 11)

எம்எஸ் தோனி: மிகப் பிரமாண்டமாக இருக்கும் இவரது பங்களா ராஞ்சியில் 7 ஏக்கரில் பறந்து விரிந்துள்ளது. இவரது சொகுசு பங்களாவின் விலை ரூ. 100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. தோனியின் பங்களாவில் நீச்சல் குளம், தோட்டம், இண்டோர் ஸ்டேடியம், ஜிம், பச்சை நிற தீம் பார்க், பைக் மற்றும் கார்கள் நிறுத்துவதற்கு பிரத்யேக கேரேஜ் போன்றவை உள்ளன. தனித்துவமாகவும், பன்முகத்தன்மையுடனும் இருக்கும் இவரது வீட்டுக்கு கைலாசபதி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது

(2 / 11)

விராட் கோலி: மும்பையில் உள்ள புகழ்பெற்ற ஓம்கார்-1973 டவர் கட்டடத்தில் கடந்த 2016இல் ரூ. 34 கோடி மதிப்பில் புதிய வீடு வாங்கினார் கோலி. இதுமட்டுமில்லாமல், ஹரியாணா மாநிலம் குர்கிராம் நகரில் மிகவும் அழகான பங்களாவையும் வாங்கியுள்ளார். 10 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டிருக்கும் இந்த பங்களாவின் விலை ரூ. 80 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. நீச்சல் குளம், படம் வரைவதற்கு என பிரத்யேக ரூம் என பல்வேறு ரூம்களுடன் இருக்கும் இந்த வீடு, சொர்க்கமாகவே கருதப்படுகிறது

(3 / 11)

யுவராஜ் சிங்: மும்பையில் உள்ள ஓர்லி பகுதியில் 16 ஆயிரம் சதுர அடியில் உள்ள அப்பார்மெண்டில் வசித்து வருகிறார் இந்திய அணியன் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங். இரண்டு பிளாட்டுகள் இணைந்து இவரது வீடு அமைந்துள்ளது. 2013ஆம் ஆண்டில் ரூ. 64 கோடிக்கு அவர் தற்போது வசித்து வரும் வீட்டை வாங்கியுள்ளார். விராட் கோலி  35வது மாடியில் இருந்து வரும் நிலையில், யுவராஜ் சிங் 29வது மாடியில் வசித்து வருகிறார். இந்த சொகுசு பங்களாவில் இருந்து அரேபிய கடலின் அழகை கண்டு ரசிக்கலாம்

(4 / 11)

சச்சின் டென்டுல்கர்: மும்பை பந்த்ரா பகுதியில் வசித்து வரும் சச்சின் டென்டுல்கர் மிகப்பெரிய வீடு 6 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ளது. 2007ஆம் ஆண்டில் இந்த பங்களாவை அவர் வாங்கியுள்ளார். 1926ஆம் ஆண்டில் பார்சி குடும்பத்தினர் இந்த பங்களாவை கட்டி வசித்து வந்தனர். சச்சின் வாங்கிய பிறகு நான்கு ஆண்டுகள் வரை இதை புதுப்பித்து அதற்கு ஐஷராமி ஹோம் என பெயர்  வைத்தார். 2011இல் குடும்பத்தினருடன் அங்கே குடிபெயர்ந்தார். ரூ.38 கோடிக்கு சச்சின் அந்த பங்களாவை வாங்கினார்

(5 / 11)

ரோஹித் ஷர்மா: இந்திய அணி கேப்டனான ரோஹித் ஷர்மா பங்களா, ரோஹி் அஹுஜா டவர்ஸ் பகுதியில் 6 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ளது. ரித்திகாவை திருமணம் செய்த பிறகு 2015இல் இந்த வீட்டை வாங்கினார் ரோஹித் ஷர்மா. முழுவதுமாக ஆட்டோமேட்டிக் அமைப்புடன் இருக்கும் இவரது வீடு வாய்ஸ் காமெண்ட், டச் பேனல் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.  அஹுஜா டவர் 53 மாடி கட்டடமாகவும், சிறந்த கட்டடத்துக்கான 5 ஸ்டார் விருதுகளையும் பெற்றுள்ளது

(6 / 11)

சுனில் கவாஸ்கர்: வடக்கு கோவா அஸ்ஸாகான் பகுதியில் 2017இல், 5 ஆயிரம் சதுர அடியில் வீடு வாங்கி ஹெட்லைன் செய்தியாக பேசப்பட்டார்.  இந்த பங்களாவில் பழங்கால மரசாமான்கள், நவீன உபகரணங்கள் இடம்பிடித்துள்ளன. பங்களாவுக்கு வெளியே புற்கள் வளர்ந்து பசுமையாக அமைந்திருக்கும். இந்த சொகுசு வில்லாவின் மதிப்பு ரூ. 20 கோடியாக உள்ளது

(7 / 11)

சுரேஷ் ரெய்னா: காசியாபாத் நகரிலுள்ள ராஜ் நகர் பகுதியில் வித்தியாசமாக பிரமாண்ட பேலஸ் போன்று கட்டியுள்ளார் சுரேஷ் ரெய்னா. இந்த சொகுசு பங்களாவின் விலை ரூ. 18 கோடி ஆகும். அனைத்து நவீன உபகரணங்களும் இவரது வீட்டில் இடம்பிடித்துள்ளன

(8 / 11)

செளரவ் கங்குலி: கொல்கத்தாவின் பணக்கார குடும்பத்தை சேர்ந்த கங்குலி, பெஹல்லா பகுதியில் அரண்மனை போன்ற வீட்டை கட்டியுள்ளார். இதன் விலை ரூ. 10 கோடியாக உள்ளது. 45 ஆண்டுகளாக, அதாவது மூன்று தலைமுறைகளாக கங்குலியின் குடும்பத்தினர் இந்த வீட்டில் வசித்து வருகின்றனர். கங்குலி வாங்கிய விருதுகள், கோப்பைகள், நினைவு பரிசுகள் அனைத்து வைக்கப்பட்டிருக்கும் ரூமை கங்குலியின் தந்த சந்திதாஸ் வடிவமைத்துள்ளார்

(9 / 11)

ரவீந்திர ஜடேஜா: குஜராத்தின் ஜாம்நகரில் நான்கு மாடி பங்களாவில் வசித்து வருகிறார் ஜடேஜா.  அரச மகிமை கொண்ட இந்த வீடு,  பல்வேறு பழங்கால உபகரணங்களை கொண்டதாக இருக்க வேண்டும். அவரது வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருள்கள் மிகவும் காஸ்ட்லியானதாக உள்ளது. ராயல் பேலஸ் போன்று இருக்கும் ஜடேஜா வீட்டின் கவனிக்க தகுந்த விஷயமாக அவரது வீட்டு கதவு உள்ளது. இதன் விலை ரூ. 10 கோடி ஆகும்

(10 / 11)

ஹர்திக் பாண்ட்யா - க்ருணால் பாண்ட்யா:  பாண்ட்யா சகோதரர்களின் விலை மதிப்புமிக்க பெண்ட் ஹவுஸ் 6 ஆயிரம் சதுர அடியில் குஜராத்தில் உள்ள வதோத்ரா நகரில் அமைந்துள்ளது. கட்டடத்தின் கடைசி மாடியில் நான்கு சொகுசு பிளாட்கள் இணைந்து இருக்கும் இவர்களது வீட்டில் ஜிம், பால்கனி கார்டன், இண்டோர் ஸ்டேடியம் உள்பட பல்வேறு விஷயங்கள் உள்ளன

(11 / 11)

மற்ற கேலரிக்கள்