Behaviours that block intimacy in a relationship : உறவில் விரிசல் ஏற்படுத்தும் காரணங்கள் என்ன?
- உரையாடலை தவிர்ப்பது, கடந்த கால பிரச்னைகள் உள்ளிட்டலை உறவில் விரிசலை ஏற்படுத்தக்கூடியவை. அவற்றை களைந்து ஆரோக்கியமான உறவை வலுப்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
- உரையாடலை தவிர்ப்பது, கடந்த கால பிரச்னைகள் உள்ளிட்டலை உறவில் விரிசலை ஏற்படுத்தக்கூடியவை. அவற்றை களைந்து ஆரோக்கியமான உறவை வலுப்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
(1 / 6)
அர்த்தமுள்ள உறவுகளை நாம் உருவாக்கிக்கொள்வதற்கு நமக்கு உறவில் நெருக்கம் மிகமிக அவசியம். அது தொடர்பை உருவாக்க உதவுகிறது. உணர்வுப்பூர்வமான நெருக்கம் ஒருவரை உண்மையாக தெரிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் உதவுகிறது. ஒருவரையொருவர் அளவுக்கு அதிகமாக நேசிக்க இது உதவுகிறது. இதில் அச்சங்கள், ஆசைகள், கனவுகள் ஆகிய அனைத்தையும் பகிர்ந்துகொள்ள உதவுகிறது. அதன் மூலம் ஒருவருக்கொருவர் உணர்வு பூர்வமான ஆதரவை பகிர்ந்துகொள்ள வழிவகுக்கிறது. உறவுகளை மேம்படுத்துவது குறித்து, உறவுகள் நிபுணர் கஸ்தூரி கூறுகையில் இதனை தெரிவித்தார். மேலும் அவர் சில பழக்கவழக்கங்கள், நடவடிக்கைகள் உறவில் விரிசலை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். (Unsplash)
(2 / 6)
நாம் உறவில் முக்கியமான உரையாடல்களை தவிர்க்க துவங்கும்போது நாம் நமது இணையரிடம் இருந்து உணர்வுப்பூர்வமாக விலகுகிறோம். அது நமக்கு பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. ஏனெனில் உரையாடலே உறவை வலுப்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக முக்கிய உரையாடல்களை நாம் தவிர்க்கவே கூடாது. எந்த பிரச்னை என்றாலும் பேசி தீர்த்துவிடவேண்டும். (Unsplash)
(3 / 6)
கடந்த காலத்தில் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் என அனைத்துமே இணையரை குறைத்து மதிப்பிடுவதுடன், மரியாதையை குறைக்கும். இதனால் இணையர்கள் இருவரும் சண்டை சச்சரவுகளை தவிர்க்க வேண்டும். எது நேர்ந்தபோதிலும் இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முயலவேண்டும். அதுவே அன்பிற்கு பாலம் அமைப்பதுடன், இருவரும் இணைந்து செல்ல வழிவகுக்கும். (Unsplash)
(4 / 6)
உறவில் நமது தேவைகள் மற்றும் ஆசைகள் குறித்து நாம் தெளிவாக விளக்கிக் கூறிவிடவேண்டும். மற்றவர்கள் நம்மை புரிந்துகொண்டு நடக்க வேண்டும் என எண்ணுவது கடுமையான சிக்கலில் கொண்டு சென்று முடிக்கும். அதுதான் தேவையில்லாத சண்டை சச்சரவுகளையும், நிறைவேறாத தேவைகளையும் கொண்டு வருகிறது. எனவே ஒருவருக்கு என்ன தேவை? அதற்காக மற்றவர் எப்படி உறுதுணையாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் அனைத்து பொறுப்புகளிலும் பங்கெடுத்து, ஆதரவை நல்குவது எப்படி என்பதை தெரிந்துகொள்ளவேண்டும். (Unsplash)
(5 / 6)
ஒருவரையொருவர் முழுமையாக புரிந்துகொள்வது மற்றும் ஒருவரின் நிலை என்னவென்று தெரிந்துகொள்வது உறவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இருவருக்கும் இடையே ஆரோக்கியமான இடைவெளி இருக்க வேண்டும். மரியாதை மற்றும் அன்பு, பாசம், பரிவு, இரக்கம் என அனைத்தும் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த உறவு சுமூகமான முறையில் நகரும். இதுவே ஆரோக்கியமான உறவுக்கு பாலம் அமைக்கும் சூட்சமங்களாகும். இதை புரிந்துகொண்டு இருவரும் செயல்படவேண்டும். (Unsplash)
மற்ற கேலரிக்கள்