தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Baakiyalakshmi: கோபியை போட்டுத் தாக்கிய பாக்யா.. மீண்டும் தாய் பாசத்திற்கு திரும்பும் கோபி.. இன்றைய பாக்யலட்சுமி!

Baakiyalakshmi: கோபியை போட்டுத் தாக்கிய பாக்யா.. மீண்டும் தாய் பாசத்திற்கு திரும்பும் கோபி.. இன்றைய பாக்யலட்சுமி!

Jun 24, 2024 10:55 AM IST Stalin Navaneethakrishnan
Jun 24, 2024 10:55 AM , IST

  • Baakiyalakshmi Today Episode: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியலில், தாய் பாசத்தை மிஞ்சும் கோபி, அவரது அம்மா மீது வெறுப்பை கக்கியதற்கு இன்றைய எபிசோடில் குடும்பத்தாரின் எதிர்வினை வருகிறது. இன்றைய எபிசோடின் சுருக்கம் இதோ!

ராதிகாவின் குழந்தை கருக்கலைய கோபியின் அம்மா ஈஸ்வரி தான் என குற்றம் சுமத்தப்பட்ட பின், உடைந்து போய் சாலையில் நிற்கும் ஈஸ்வரியை, தன் வீட்டிற்கு அழைத்து வருகிறார் பாக்யலட்சுமி.  ஈஸ்வரி கதறி அழ, பதறிப் போகும் குடும்பத்தார் காரணம் கேட்கிறார்கள். ஈஸ்வரி மீதான குற்றச்சாட்டை கோபியும் ஆதரித்ததை அவர்கள் ரசிக்கவில்லை, கோபமாகிறார்கள்.

(1 / 7)

ராதிகாவின் குழந்தை கருக்கலைய கோபியின் அம்மா ஈஸ்வரி தான் என குற்றம் சுமத்தப்பட்ட பின், உடைந்து போய் சாலையில் நிற்கும் ஈஸ்வரியை, தன் வீட்டிற்கு அழைத்து வருகிறார் பாக்யலட்சுமி.  ஈஸ்வரி கதறி அழ, பதறிப் போகும் குடும்பத்தார் காரணம் கேட்கிறார்கள். ஈஸ்வரி மீதான குற்றச்சாட்டை கோபியும் ஆதரித்ததை அவர்கள் ரசிக்கவில்லை, கோபமாகிறார்கள்.

ஈஸ்வரியை எவ்வளவு சொல்லி தேற்ற முயற்சிக்கிறது பாக்யலட்சுமி குடும்பம். ஆனால், தன் மகன், தன்னை குழந்தையை கொன்றவள் என்று குற்றம்சாட்டிவிட்டான் என்று மனசு உடைந்து அழுகிறார் ஈஸ்வரி. அவரது சூழலை குடும்பத்தார் புரிந்து கொள்கிறார்கள். காப்பாற்ற வந்தவர் மீது வீண் பழி சுமத்தப்பட்டதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். இப்போது கோபி மீது குடும்பத்தார் கோபம் திரும்புகிறது. 

(2 / 7)

ஈஸ்வரியை எவ்வளவு சொல்லி தேற்ற முயற்சிக்கிறது பாக்யலட்சுமி குடும்பம். ஆனால், தன் மகன், தன்னை குழந்தையை கொன்றவள் என்று குற்றம்சாட்டிவிட்டான் என்று மனசு உடைந்து அழுகிறார் ஈஸ்வரி. அவரது சூழலை குடும்பத்தார் புரிந்து கொள்கிறார்கள். காப்பாற்ற வந்தவர் மீது வீண் பழி சுமத்தப்பட்டதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். இப்போது கோபி மீது குடும்பத்தார் கோபம் திரும்புகிறது. (Disney + Hotstar)

கோபத்தின் உச்சத்திற்கு செல்லும் பாக்யலட்சுமி, கோபியை பார்த்து அதற்கு நியாயம் கேட்க முடிவு செய்கிறார். மாமியாருக்கு நியாயம் கேட்டு, முன்னாள் கணவரிடம் செல்லும் பாக்யலட்சுமி, என்ன சொல்லப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எகிறுகிறது. 

(3 / 7)

கோபத்தின் உச்சத்திற்கு செல்லும் பாக்யலட்சுமி, கோபியை பார்த்து அதற்கு நியாயம் கேட்க முடிவு செய்கிறார். மாமியாருக்கு நியாயம் கேட்டு, முன்னாள் கணவரிடம் செல்லும் பாக்யலட்சுமி, என்ன சொல்லப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எகிறுகிறது. (Disney + Hotstar)

காரில் இருந்து வந்திறங்கும் கோபியிடம், பாக்யா பேச வருகிறார். பாக்யாவை பார்த்ததும் கோபிக்கு கோபம். இவள் எதற்கு நம்மிடம் பேச வருகிறாள் என்கிற கோபம். தன் தாய்க்கு ஆதரவாக வருகிறாள் என்கிற கோபம். ஆனால், பாக்யா வந்த வேகத்தில் கோபியை ஒரு பிடி பிடிக்கிறார். கோபி அதை எதிர்பார்க்கவில்லை. ஒரு தாயை புரிந்து கொள்ள முடியாதா என பாக்யா கேட்கும் கேள்விகள் கோபியை திக்குமுக்காட வைக்கிறது

(4 / 7)

காரில் இருந்து வந்திறங்கும் கோபியிடம், பாக்யா பேச வருகிறார். பாக்யாவை பார்த்ததும் கோபிக்கு கோபம். இவள் எதற்கு நம்மிடம் பேச வருகிறாள் என்கிற கோபம். தன் தாய்க்கு ஆதரவாக வருகிறாள் என்கிற கோபம். ஆனால், பாக்யா வந்த வேகத்தில் கோபியை ஒரு பிடி பிடிக்கிறார். கோபி அதை எதிர்பார்க்கவில்லை. ஒரு தாயை புரிந்து கொள்ள முடியாதா என பாக்யா கேட்கும் கேள்விகள் கோபியை திக்குமுக்காட வைக்கிறது(Disney + Hotstar)

‘உங்க அம்மாவை எப்படி நீங்க சந்தேகப்படலாம்? உங்களுக்கு அவங்க கெடுதல் நினைப்பாங்களா? உங்க குழந்தையை அவங்க கொலை பண்ணுவாங்களா?’ என்று பாக்யா அடுத்தடுத்து கேள்வி கேட்க, குற்றஉணர்ச்சியிலும், குழப்பத்திலும் கோபி நெழிகிறார். அவரிடம் இருந்து பதில் வரவில்லை. பாக்யா படபடவென பேசிவிட்டு அங்கிருந்து புறப்படுகிறார்

(5 / 7)

‘உங்க அம்மாவை எப்படி நீங்க சந்தேகப்படலாம்? உங்களுக்கு அவங்க கெடுதல் நினைப்பாங்களா? உங்க குழந்தையை அவங்க கொலை பண்ணுவாங்களா?’ என்று பாக்யா அடுத்தடுத்து கேள்வி கேட்க, குற்றஉணர்ச்சியிலும், குழப்பத்திலும் கோபி நெழிகிறார். அவரிடம் இருந்து பதில் வரவில்லை. பாக்யா படபடவென பேசிவிட்டு அங்கிருந்து புறப்படுகிறார்(Disney+ Hotstar)

பாக்ய பேசிவிட்டு சென்ற பின், கோபிக்கு அம்மா பக்கம் இருக்கும் நியாயங்கள் தெரியவருகிறது. இனி ராதிகாவிடம் போய் அதை புரிய வைக்க வேண்டும், அம்மாவின் குற்ற உணர்ச்சியை போக்க வேண்டும், அம்மா மீது சுமத்திய குற்றத்தை நீக்க வேண்டும் என்கிற பல பொறுப்புகள் தலையில் ஏறுகிறது. எப்படி இருந்தால், இந்த பிரச்னையை தீர்த்தாலும், தவிர்த்தாலும் நெருக்கடி என்னவோ கோபி மீது தான் வரப்போகிறது. இது தான் இப்போதைக்கு அவருடைய பெரிய கவலை.

(6 / 7)

பாக்ய பேசிவிட்டு சென்ற பின், கோபிக்கு அம்மா பக்கம் இருக்கும் நியாயங்கள் தெரியவருகிறது. இனி ராதிகாவிடம் போய் அதை புரிய வைக்க வேண்டும், அம்மாவின் குற்ற உணர்ச்சியை போக்க வேண்டும், அம்மா மீது சுமத்திய குற்றத்தை நீக்க வேண்டும் என்கிற பல பொறுப்புகள் தலையில் ஏறுகிறது. எப்படி இருந்தால், இந்த பிரச்னையை தீர்த்தாலும், தவிர்த்தாலும் நெருக்கடி என்னவோ கோபி மீது தான் வரப்போகிறது. இது தான் இப்போதைக்கு அவருடைய பெரிய கவலை.(Disney + Hotstar)

பாக்யலட்சுமியின் இன்றைய எபிசோட் பரபரக்கப் போகிறது. மீண்டும் தாய் பக்கம் திரும்பப் போகிறாரா கோபி? அப்படி அவர் வந்தால், ராதிகாவின் ஸ்டாண்ட் என்னவாக இருக்கும்? அதன் பின் நடப்பவை என்ன? என்கிற புதிய லீட் ஓப்பன் ஆகியுள்ளது. 

(7 / 7)

பாக்யலட்சுமியின் இன்றைய எபிசோட் பரபரக்கப் போகிறது. மீண்டும் தாய் பக்கம் திரும்பப் போகிறாரா கோபி? அப்படி அவர் வந்தால், ராதிகாவின் ஸ்டாண்ட் என்னவாக இருக்கும்? அதன் பின் நடப்பவை என்ன? என்கிற புதிய லீட் ஓப்பன் ஆகியுள்ளது. (Disney + Hotstar)

மற்ற கேலரிக்கள்