Amit Shah Vs Rahul Gandhi: ‘நான் ஒரு கதை சொல்லட்டுமா தம்பி..’ ராகுல் காந்தியை ஒரு புடி பிடித்த அமித் ஷா!
- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது உரைகளின் போது இந்திய அரசியலமைப்பின் நகல்களை காட்டியதற்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கிண்டல் செய்ததுடன், அவருக்கு புள்ளி விபரங்களுடன் பதிலளித்தார்.
- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது உரைகளின் போது இந்திய அரசியலமைப்பின் நகல்களை காட்டியதற்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கிண்டல் செய்ததுடன், அவருக்கு புள்ளி விபரங்களுடன் பதிலளித்தார்.
(1 / 7)
அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகளைக் குறிக்கும் விவாதத்தில் மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அப்போது அவர் பேசியவை இங்கே:
(2 / 7)
‘‘அரசியலமைப்பின் போலி நகல்களை அவர் வைத்திருப்பதை மக்கள் கண்டறிந்ததால் தான் காங்கிரஸ் தோற்றது. தன்னை 'யுவா'(இளைஞர்) என்று அழைத்துக் கொள்ளும் 54 வயதான தலைவர்(ராகுல்), நாங்கள்(பாஜக) அரசியலமைப்பை மாற்றுவோம் என்று கூறி அரசியலமைப்புடன் சுற்றித் திரிகிறார். அரசியலமைப்பை திருத்துவதற்கான ஏற்பாடு என்பது, அரசியலமைப்பிற்கு உட்பட்டது என்பதை நான் சொல்ல விரும்புகிறேன்’’(ANI/Sansad TV)
(3 / 7)
அரசியலமைப்பில் திருத்தங்களை செயல்படுத்த 368 வது பிரிவில் விதிகள் உள்ளன. மேலும் காங்கிரஸ் கட்சி, எங்கள் கட்சியை விட மத்தியில் தனது பதவிக்காலத்தில் அதிக அரசியலமைப்புத் திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது.(PTI)
(4 / 7)
‘‘பாஜக 16 ஆண்டுகளாக ஆட்சி செய்துள்ளது, நாங்கள் அரசியலமைப்பில் 22 மாற்றங்களைச் செய்துள்ளோம். 55 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, 77 மாற்றங்களை செய்துள்ளது’’(ANI)
(5 / 7)
"கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்த" முதல் அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். (ANI)
(6 / 7)
அரசியலமைப்பின் முதல் திருத்தம் ஜூன் 18, 1951 அன்று செய்யப்பட்டது. அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட பிறகு, ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மக்களவைத் தேர்தல் வரை காத்திருக்க காங்கிரஸுக்கு போதுமான பொறுமை இல்லை. பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்த பிரிவு 19 ஏ அப்போதே சேர்க்கப்பட்டது, அந்த நேரத்தில் ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தார். (ANI)
மற்ற கேலரிக்கள்