Poornima Bhagyaraj Love: ‘சாப்பிட வர்றீங்களா?’ பல நாள் வாழ்க்கையை தீர்மானித்த பாக்யராஜ்-பூர்ணிமாவின் ஒரு நாள் சந்திப்பு!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Poornima Bhagyaraj Love: ‘சாப்பிட வர்றீங்களா?’ பல நாள் வாழ்க்கையை தீர்மானித்த பாக்யராஜ்-பூர்ணிமாவின் ஒரு நாள் சந்திப்பு!

Poornima Bhagyaraj Love: ‘சாப்பிட வர்றீங்களா?’ பல நாள் வாழ்க்கையை தீர்மானித்த பாக்யராஜ்-பூர்ணிமாவின் ஒரு நாள் சந்திப்பு!

Sep 07, 2023 06:10 AM IST Stalin Navaneethakrishnan
Sep 07, 2023 06:10 AM , IST

  • Director K.Bhagyaraj: பிரபல இயக்குனரும், முன்னணி நடிகை பூர்ணிமாவும் இன்றும் பலருக்கு உதாரணமாக வாழும் தம்பதிகள். அவர்களின் காதல் சுவாரஸ்யமானது. இயக்குனரும், கதாநாயகியும் இணைந்தது எப்படி?

பயணங்கள் முடிவதில்லை படத்திற்குப் பின்பாக, தமிழ் படங்களை விட பிற மொழிப்படங்களில் பிஸியானார் பூர்ணிமா. மலையாளப் படம் ஒன்றுக்காக பாரீஸ் போக இருந்ததால், அதற்கு முன்பு மும்பையில் தன் அம்மாவிடம் இரு நாட்கள் தங்கியிருக்கலாம் என முடிவு செய்தார். 

(1 / 6)

மும்பை வந்திருந்த போது, பாக்யராஜ் அங்கு ஷூட்டிங்கில் இருப்பதாக உதவியாளர் மூலம் பூர்ணிமாக்கு தகவல் கிடைத்தது. ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தில் அவர்கள் நடித்திருந்ததால், உடனே பாக்யராஜூக்கு போன் செய்தார் பூர்ணிமா.

(2 / 6)

‘என்ன சார்.. எங்க ஊருக்கு வந்திருக்கீங்க.. வீட்டுக்கு சாப்பிட வாங்க..’ என்று பாக்யராஜூக்கு அழைப்பு விடுத்தார் பூர்ணிமா. மறுநாள் பாக்யராஜ் வீட்டிற்கு வர, பதறிப் போனார் பூர்ணிமா. அன்று வீட்டில் நவராத்திரி விழா. பால்கனியில் இருந்தபடி அவற்றை பார்த்துக் கொண்டே இருவரும் பல மணி நேரம் பேசினர். 

(3 / 6)

ஒரு வழியாக பேச்சு நிறைவடைந்து, ‘பாரீஸ் போய்டு வந்து.. எனக்கு கால் பண்ணுங்க’ என்று கூறி, அங்கிருந்து விடைபெற்றார் பாக்யராஜ். 

(4 / 6)

‘ஏன் நம்மை போன் செய்யச் சொன்னார்,’ என்று பூர்ணிமாவுக்கு ஒரே குழப்பம். பாரீஸ் இருந்து இருமுறை பாக்யராஜை தொடர்பு கொண்டும் அவரால் பேச முடியவில்லை. நாடு திரும்பி ஏர்போர்ட் வந்து இறங்கினால், பூர்ணிமாவுக்கு ஷாக்.

(5 / 6)

காரோடு காத்திருந்தார் பாக்யராஜ். ‘நீங்க இந்த காரை எடுத்துட்டு போங்க.. நான் பூர்ணிமா கூட கொஞ்சம் பேசணும்’ என்று அவரது அம்மாவிடம் கூறி, அவரை அனுப்பினார். பின்னர் பூர்ணிமாவை பீச்க்கு அழைத்து வந்த பாக்யராஜ், ‘கல்யாணம் பண்ணிக்கலாமா?’ என்று கேட்டுள்ளார். ‘அப்பாவிடம் கேளுங்க..’ என்று பூர்ணிமா கூற, ‘எல்லாரிடமும் கேட்டாச்சு.. உங்களுக்கு ஓகேவா?’ என்று கேட்டுள்ளார் பாக்யராஜ். ‘எனக்கும் ஓகே..’ என்று பூர்ணிமா சொல்ல, இருவரும் தம்பதியாகினர். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்