YSRTP Sharmila : பெண் காவலரை பளார் என அறைந்த YSRTP ஷர்மிளா - வைரலாகும் வீடியோ!
ஒய்எஸ்ஆர்டிபி தலைவர் ஷர்மிளா பெண் காவலரை அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலங்கானாவில் அரசுப் பணியாளர் தேர்வாணைய வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக யுவஜன ஸ்ராமிக்க ரைத்து தெலுங்கானா கட்சியின் ( YSRTP) தலைவரும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையுமான சர்மிளா சென்றார்.
வீட்டில் இருந்து வெளியே வந்து காரில் வேகமாக ஏற முயன்ற சர்மிளாவை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சர்மிளா பெண் காவலர் ஒருவரின் கண்ணத்தில் பளார் என அறைந்துள்ளார். இதனையடுத்து அவரை பெண் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து ஒய்எஸ்ஆர்டிபி தலைவர் ஒய்எஸ் ஷர்மிளா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். சர்மிளா போலீசாரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கேள்வித்தாள் கசிவு தொடர்பாக மகபூப்நகரைச் சேர்ந்த மிபய்யா மற்றும் அவரது மகன் ஜனார்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர், இதையடுத்து, இந்த விவகாரத்தில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
டாபிக்ஸ்