தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Woman On A Scooter Was Seriously Injured Due To A Burst Water Pipe

Viral Video: ஸ்கூட்டரிலிருந்து பறந்த பெண் - குழாய் வெடித்ததில் படுகாயம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 05, 2023 01:17 PM IST

குடிநீர் குழாய் வெடித்து தண்ணீர் பீய்ச்சி அடித்ததில் ஸ்கூட்டரில் வந்த இளம் பெண் பலத்த காயமடைந்துள்ளார்.

பறந்த பெண்
பறந்த பெண்

ட்ரெண்டிங் செய்திகள்

குடிநீர் குழாய் வெடித்த காரணத்தினால் தண்ணீர் பீய்ச்சு அடித்து வெளியேறிய போது அதன் அதிர்வுகளால் சாலையில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் போது அவ்வழியாக ஸ்கூட்டரில் சென்ற இளம் பெண் படுகாயம் அடைந்துள்ளார்.

இந்த விபத்து குறித்த காட்சிகள் அப்பகுதியிலிருந்த அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில்," குடிநீர் குழாய் வெடித்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கிறது. அந்த தண்ணீரின் நிறம் பழுப்பு நிறமாக உள்ளது. அப்போது அவ்வழியாக ஸ்கூட்டரில் இளம் பெண் ஒருவர் வந்துள்ளார். ராட்சத அலை போல் பீய்ச்சி அடிக்கும் தண்ணீர் அவர் மீது விழுகிறது" என பதிவாகி உள்ளது.

குடிநீர் குழாயிலிருந்து வெளிவந்த தண்ணீர் அனைத்தும் அங்கிருந்த பள்ளம் முழுவதும் நிரம்பியது. சாலை முழுவதும் கற்கள் சிதறிக் கிடந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்