தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Woman From West Bengal Raped, Tortured For A Week In Delhi, Friend Arrested

Delhi Crime: இளம் பெண்ணுக்கு ஒரு வாரம் பாலியல் வன்கொடுமை; 20 இடங்களில் காயம்.. நண்பர் கைது!

Stalin Navaneethakrishnan HT Tamil
Feb 07, 2024 09:05 PM IST

அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரது உடலில் சுமார் 20 இடங்களில் காயங்கள் இருந்தன

பாலியல் வன்காெடுமை செய்யப்பட்ட பெண், ஒரு வாரத்திற்குப் பின் மீட்பு.
பாலியல் வன்காெடுமை செய்யப்பட்ட பெண், ஒரு வாரத்திற்குப் பின் மீட்பு.

ட்ரெண்டிங் செய்திகள்

குற்றம் சாட்டப்பட்டவர் பராஸ் (28) என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் மீது பாலியல் பலாத்காரம், ஓரினச்சேர்க்கை மற்றும் காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிப்ரவரி 2-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.

தெற்கு டெல்லியின் நெப் சராய் பகுதியில் உள்ள ராஜு பூங்காவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் அந்த பெண் சுமார் ஒரு மாதமாக பராஸுடன் தங்கியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசாரின் கூற்றுப்படி, ஜனவரி 30 ஆம் தேதி, நெப் சராய் காவல் நிலையத்திற்கு ஒரு பெண் தனது கணவரால் தாக்கப்படுவதாக பி.சி.ஆர் அழைப்பு வந்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் குழுவினர் அந்த பெண்ணை மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரது உடலில் சுமார் 20 இடங்களில் காயங்கள் இருந்தன. அவர் சமீபத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று அவர்கள் தெரிவித்தனர்.

"இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரித்தபோது, பாதிக்கப்பட்ட பெண் மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கைச் சேர்ந்தவர் என்றும், குற்றம் சாட்டப்பட்டவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும்,’’ கூறினார்.

WhatsApp channel

டாபிக்ஸ்