தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Woman Addicted To Eating Mattresses In America

ஷாக்.. ஒரு நாளைக்கு ஒரு சதுரடி .. பெட்டை பிரட் போல் சாப்பிடும் விநோத பெண்!

Divya Sekar HT Tamil
Feb 04, 2023 12:05 PM IST

Mattress Eating Addiction : அமெரிக்காவில் பெண் ஒருவர் மெத்தைகளை உண்ணும் வித்தியாசமான பழக்கத்தை கொண்டுள்ளார்.

பெட்டை பிரட் போல் சாப்பிடும் விநோத பெண்
பெட்டை பிரட் போல் சாப்பிடும் விநோத பெண்

ட்ரெண்டிங் செய்திகள்

நம்மில் சிலருக்கு அரிசி சாப்பிடுவது, மண் சாப்பிடுவது, சிலேட் பென்சில் சாப்பிடுவது, சுவரில் உள்ள சுண்ணாம்களை பெயர்த்து சாபிடுவது போன்ற பழக்கம் இருக்கும். அதற்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாமலும் பலர் சிக்கிக் கொள்வதுண்டு. நாம் அதை பார்த்தும் இருப்போம். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் மெத்தைகளை சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஜெனிஃபர் என்ற பெண் தனக்கு படுக்கை மெத்தைகளை (mattress) உண்ணும் பழக்கமிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். இது தான் தற்போது வைரலாகி வருகிறது.

டிஎல்சி எனும் சேனலுக்கு பேட்டியளித்த ஜெனிஃபர் இதனை ஒப்புக்கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாது லைவ் ஷோவில் மெத்தையை அவர் சாப்பிட்டு காட்டியிருக்கிறார். தான் 5 வயதில் இருக்கும்போது முதன் முதலாக குஷனில் உள்ள பஞ்சை சாப்பிட தொடங்கியதாகவும், இதனையடுத்து இந்த பழக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் இதனை கைவிட முடியாமல் ஒரு நாளைக்கு ஒரு சதுரடி என மெத்தையை சாப்பிட தொடங்கியுள்ளார்.

இது குறித்து ஜெனிஃபர் கூறுகையில், ‘ மெத்தைகளை சாப்பிடுவதால் ஏகப்பட்ட பக்க விளைவுகளை சந்தித்திருக்கிறேன். இது உடலிலிருந்து கழிவுகளாக வெளியேறிவிடுகிறது. ஆனால் ஏகப்பட்ட வாயு கோளாறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இதை சாப்பிடும்போது உடன் மயோனிஸ் அல்லது சாஸ் என எதையும் சேர்த்துக்கொள்வதில்லை. இதை அப்படியே சாப்பிடதான் எனக்கு பிடிக்கும்.

நான் எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் இதனை நிறுத்த முடியவில்லை. இப்பழக்கத்தை நிறுத்துவது மிகவும் ஒரு கஷ்டமான காரியம்தான். இருப்பினும் நான் இதனை விரைவில் நிறுத்திவிடுவேன் என்று நம்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக இப்பெண்ணின் விநோத பழக்கம் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்தப் பழக்கத்தைத் தொடர்கையில், ஆபத்தில் சென்று முடியலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

பெட்டை பிரட் போல் சாப்பிடும் விநோத பெண்
பெட்டை பிரட் போல் சாப்பிடும் விநோத பெண்

மேலும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அது அவரது ஆரோக்கியத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும், இது கல்லீரல் சேதம் மற்றும் குடல் அடைப்புக்கு வழிவகுக்கும் என்றும், இதன் மூலம் மரணம் கூட ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளனர். இந்த செய்தியை கேட்ட ஜெனிபர் அதிர்ச்சியடைந்து தனது பழக்கத்தை கைவிட முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்