Mekedatu Dam Issue: மேகதாது திட்டம் எங்கள் உரிமை; வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம் இல்லை - டி.கே. சிவகுமார்
மேகதாது திட்டத்தை அமல்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் நீர்பாசனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் துணை முதலமைச்சர் டி. கே. சிவகுமார், நீர்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து பெங்களுருவில் வைத்து நீர்பாசனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மேதாட்டு அணை திட்டம் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அதிகாரிகளிடம் பேசிய டி.கே.சிவகுமார், கர்நாடகா மாநிலத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, மாநில் அரசின் நீர் திட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதியை பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும். இதை முதல் இலக்காக வைத்து செயல்பட வேண்டும்.
மேகதாட்டு திட்டத்துக்கு அரசு ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கியது. அதை இதுவரை நிலங்களை கையக்கப்படுத்தாமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.
அத்துடன் மேதாட்டு திட்ட பணிகளை மேற்கொள்ள தீவிரமாக உழைக்க வேண்டும். எனக்கு யாரிமும் எந்த விரோதமும் இல்லை. ஆனால் பணிகள் அனைத்தும் சரியாக நடைபெற வேண்டும்.
பதவி வழங்கியவர்களுக்காக விசுவமாக இருக்கும் அதிகாரிகள் சகித்துபோக மாட்டேன். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேசுவோம் என்று கூறியுள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.கே. சிவகுமார் கூறியதாவது: "காங்கிரஸ் கட்சி மக்களுக்கு அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் விரைவில் நிறைவேற்றப்படும். கர்நாடகவில் நீண்ட நாள் நிலுவையில் உள்ள முக்கிய திட்டமான மேகதாது அணை மற்றும் மகதாயி அணை திட்டத்தை அமல்படுத்த விரைவில் டெல்லி சென்று உரிய ஒன்றிய அமைச்சர்களை சந்திக்க உள்ளேன்.
இந்த திட்டங்களுக்கான அனுமதி பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்படும். மேகதாது அணை கட்டுவது எங்களது உரிமை. அதை குறிக்கோளாக வைத்து செயல்படுவோம். வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம் இல்லை"
இவ்வாறு அவர் கூறினார்.
டாபிக்ஸ்