Karnataka New CM : கர்நாடகா புதிய முதல்வர் யார்? தலைமை முடிவு செய்யும் என தீர்மானம்!
கர்நாடக முதலமைச்சரை தலைமை முடிவு செய்ய வேண்டி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவையில் உள்ள 224 தொகுதிகளுக்கு கடந்த 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக, எதிர்கட்சியான காங்கிரஸ், குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நடைபெற்றது. இந்த தேர்தலில் கூடுதலாக, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிட்டது.
இதையடுத்து சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலை பெற்று வந்த காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஆட்சி அமைப்பதற்கு 113 இடங்கள் தேவையான நிலையில், அறுதிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. ஆளும் பாஜக 65 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களிலும், இதர கட்சிகள் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
இதையடுத்து கர்நாடக காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் என கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர், சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.சிவகுமார் அறிவித்தார். இந்த கூட்டத்தில் கர்நாடகா மாநிலத்தில் முதலமைச்சர் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அதன்படி பெங்களூரில் உள்ள தனியார் விடுதியில் கர்நாடக முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் தொடங்கியது. மேலிட பார்வையாளர்கள் சுஷில்குமார் ஷிண்டே, ஜிதேந்திர சிங், தீபக் பாபாரியா முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
இதில் கர்நாடக முதலமைச்சரை தலைமை முடிவு செய்ய வேண்டி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: